உலகம் முழுவதும் பரந்து விரிந்து பயன்தரகூடிய கற்றாழை சாற்றின் நன்மைகளை தெரிந்துகொள்வதற்கு முன்னால் இதில் என்னென்ன சத்துகள் நிறைந்துள்ளது என்று பார்க்கலாம். கற்றாழை சாற்றில் 75 விதமான செயல்பாட்டு தனிமங்கள் உள்ளது. இதில் வைட்டமின், மினரல்ஸ், சர்க்கரை, நொதிகள், அமினோ அமிலம், சாலிக்ளிக் அமிலம், லிக்னைன் மற்றும் சபோனினும் கற்றாழை சாற்றில் வைட்டமின் ஏ, சி, மற்றும் இ, ஃபோலிக் ஆசிட், வைட்டமின் B-12, கோலைன் போன்ற வைட்டமின்ஸ் மற்றும் கால்சியம், காப்பர், மக்னீசியம், மாங்கனீஸ், செலினியம், சோடியம், சிங்க் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்ஸ் அடங்கியுள்ளது.
To Buy Our Herbal Products >>>
இதில் இருக்கும் Laxative பண்புகள் செரிமான மண்டலத்தின் நிகழ்வை ஊக்குவிக்கும். அதனால் கற்றாழை சாறு செரிமானத்திற்கு உதவுகின்றது. அதோடு இது உடலிற்கு நல்ல பாக்டீரியாவை வழங்குவதினால் வயிற்று அல்சரை குணப்படுத்தவும் செய்கின்றது. அல்சர் இருப்பவர்கள் தொடர்ந்து 3௦ நாள் காலையில் இந்த கற்றாழை சாற்றை குடித்து வருவது நல்லது. அதோடு உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடகூடியதாக இருக்கின்றது. இதில் இருக்கும் ஆண்டி-அழற்சி பண்புகள் குடல் நோயறிகுறி, நீர்க்கட்டு, தோல் அழற்சி, தோல் சிவந்து போவது போன்ற சிகிச்சைக்கு பயனளிக்ககூடியதாக இருக்கின்றது.
கற்றாழை சாற்றில் இருக்கும் Ghibelline ஹார்மோன், சர்க்கரை நோயாளிக்கு ஏற்படும் அழற்சியை குணப்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது. இதேபோல் வலி ஏற்படுவதையும் தடுக்கும் ஆற்றல் இந்த கற்றாழை சாற்றில் உள்ளது. இது மூட்டுவலி, தசைவலி, போன்ற கடுமையான வலியை போக்குவதோடு குரோனிக் கேன்சர், எலும்பு நோய் சிகிச்சைக்கும் வலி நிவாரணியாக பயன்பட்டு வருகின்றது. தற்போது வந்த ஆய்வில், மார்பு வலி, இதய வலி இவற்றால் பாதிக்கப்பட்ட 5௦௦௦ நோயாளிகளின் சிகிச்சையில் கற்றாழை சாறு நல்ல பலனை கொடுத்துள்ளதாம். அதோடு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் என கூறுகின்றனர்.