பிரமிக்க வைக்கும் கற்றாழை பேஸ் பேக் வகைகள்…

Spread the love

கற்றாழையின் இயற்கை குணமே, சரும புத்துணர்ச்சி, பாக்டீரியாக்களை அழிக்க கூடிய வல்லமை,முகப்பருவை போக்குற ஆற்றல், தோலழற்சி குணப்படுத்துவது, நீரேற்றத்தை கட்டுப்படுத்துவது என சொல்லிக்கொண்டே போகலாம்.

எப்படிப்பட்ட சருமத்திற்கும் சிறந்த moisturizer ஆக பயன் தர கூடிய பேஸ் பேக்காகவும் பயன் தருகின்றது… கற்றாழையை வைத்து சில பேஸ் பேக்கை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

முதலில் கற்றாழையோடு மஞ்சளை சேர்த்து தயாரிக்கக்கூடிய பேஸ் பேக் பற்றி பார்ப்போம்… அதற்கு தேவைபடக் கூடியது, ஒரு துண்டு மஞ்சள், இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு டீஸ்பூன் தேன், சில துளி ரோஸ் வாட்டர் இவையெல்லாவற்றையும் சேர்த்து பேஸ்ட் போல்தயார் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் இருந்து கழுத்து வரைக்கும் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, சுத்தமான காட்டன் துணியில் துடைக்க வேண்டும்.

இதனால், முகம் பொலிவு அடையவும், மஞ்சள்  தன்மை முகத்தோடு நிறுத்த கூடவும் உதவுகிறது… மேலும் இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் தோலில் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கின்றது.. இந்த பேஸ் பேக் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் போதும்.
அடுத்து கற்றாழையோடு வாழைப்பழம் சேர்த்து தயாரிக்க கூடிய பேஸ் பேக்.. இதற்கு தேவையானது, ஓரு டீஸ்பூன் கற்றாழை ஜெல், நான்கு துண்டு வாழைப்பழம்..வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதோடு கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து வைக்கவும்..

இந்த கலவையை முகத்தில் பேக் போட்டு ஒரு பத்து நிமிடம் கழித்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்… இது சருமத்திற்கு ஊட்டச்சத்தை வழங்கி, முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கின்றது… மங்கலான முகம் பொன்னிறமாக மாறவும் இந்த பேக் பயனளிக்கும்…
கடைசியாக பார்க்கபோவது, தயிர் சேர்த்து தயாரிக்கக்கூடிய பேஸ் பேக்.. இதற்கு இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு டீஸ்பூன் தயிர் , ஒரு டீஸ்பூன் தேன் அல்லது எலுமிச்சை சாறு.. வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனை சேர்த்து கொள்ளலாம். 

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றை சேர்த்து கொள்ளலாம்.இந்த பொருட்களை சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்து, பேக் போட்டு 15 நிமிடம் வரை காய வைத்து கழுவவும்.. இந்த பேக்கை வாரத்திற்கு மூன்று முறை செய்து வரலாம்.. தயிர் எந்த வகையான சருமத்திற்கும் நல்ல க்ளென்சராக பயன்படுகிறது.

தயிரில் இருக்கும் மென்மையான அமிலங்கள் முக துவாரத்தில் தேங்கி இருக்கும் அழுக்குகளையும், நச்சுக்கிருமிகளையும் சுத்தம் செய்து வெளியேற்றிவிடும். இதனால் முகத்தில் எந்த வித தொற்றும் ஏற்படாமல் தப்பிக்கலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love