அல்ஃபால்ஃபா (Alfalfa)

Spread the love

சத்துக்கள் நிறைந்த அல்ஃபால்ஃபா மிக முக்கியமான ஆடு, மாடு தீவனங்களில் ஒன்று. லெகுமே (Legume – இரு புற வெடி கனி) இனத்தை சேர்ந்தது. அல்ஃபால்ஃபா உலகெங்கும் கீழ்க்கண்ட காரணங்களால் பயிரிடப்படுகிறது.

 1. நல்ல திடமான தாவரம். நீர் குறைந்த வறட்சி பிரதேசங்களிலும் பயிரிடமுடியும். இதன் வேர் “மண்டலம்” விரிவானது, ஆழமானது. 4.5 மீட்டர் ஆழம் வரை வேர்கள் போகும். இதனால் வறண்ட பிரதேசங்களிலும் வளர்கிறது. எளிதில் சீரணமாகும் நார்ச்சத்து நிறைந்தது
 • இதன் வேர் முடிச்சுகளில் Sinorhizobium meliloti என்ற பாக்டீரியா இருக்கிறது. இந்த பாக்டீரியா நைட்ரஜனை நிலத்தில் தக்க வைக்கும் குணமுடையது. இதனால் அதிக புரதம் இந்த நிலத்தில் பயிரிடப்படும் பயிர்களை சேர்கிறது. அல்ஃபால்ஃபா இதர பயிர்களுடன் பயிரிடப்படுவதால், எல்லா பயிர்களும் சக்தி மிகுந்தவைகளாக வளர்கின்றன. அல்ஃபால்ஃபா சிறந்த புரதம் நிறைந்த மாட்டுத் தீவனமாகிறது.
 • அல்ஃபால்ஃபா நிலையான, வற்றாத தாவரம். ஒருதடவை போட்டபின் 20 வருடம் மகசூல் கானும். ஒரு ஏக்கருக்கு 6 டன் கிடைக்கும். இதில் 25% புரதமாகும். உலகிலேயே அதிகமாக இந்தப் பயிரை பயிரிடுவது அமெரிக்கா. உலகில் 60 மில்லியன் ஏக்கர் நிலத்தில் அல்ஃபால்ஃபா பயிரிடப்படுகிறது. இதில் பாதி நிலப்பரப்பு அமெரிக்காவில் தான். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா மற்றும், மத்தியகிழக்கு (அரேபியா தேசங்கள்) ஆசியா, இவற்றிலும் அல்ஃபால்ஃபா பயிரிடப்படுகிறது. தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பாலும் விளைகிறது.

அரேபியர்கள் தான் முதலில் அல்ஃபால்ஃபாவை கண்டறிந்தனர். அவர்கள் இந்தப்பயிரை “அரசரின் அரசன்” என்றும், “எல்லா உணவுகளின் தந்தை” என்றும் கொண்டாடினர். பல நூற்றாண்டுகளாக குதிரைத் தீவனமாக இதை உபயோகித்து வருகின்றனர். இந்த பயிரை உண்பதால் தான் “அரேபிய குதிரைகள்” உலகப்பிரசித்தி பெற்றன. பாரசீகர்கள் இதை “குணப்படுத்தும் புல்” என்றனர்.

அல்ஃபால்ஃபாவில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், குளோரின், சோடியம் பொட்டாசியம், சிலிகன் இவையெல்லாம் சமச்சீராக நிறைந்திருக்கின்றன. தவிர ஏ, H, டி, இ மற்றும் இதர விட்டமின்களும் உள்ளன. அல்ஃபால்ஃபாவில், தானியங்கள், கோதுமை இவற்றில் உள்ள புரதத்தை விட 11/2 மடங்கு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, தானியங்களில் இருப்பதைவிட அல்ஃபால்ஃபாவில் கார்போஹைடிரேட் (மாவுச்சத்து) குறைவு. நார்ச்சத்தும், பச்சையமும் (Chlorophyl) நிறைந்தது.

தாவர விவரங்கள்

அல்ஃபால்ஃபா ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். பசுமையான இலைகளுடன், ஊதா நிற பூக்களும் உடையது. இதன் தாவரவியல் பெயர்: Medicago sativa.

பயன்கள்

 1. இது ஒரு சிறந்த அல்கலி (Alkali) – அமிலத்தை அழிக்கும் ‘உப்பு’. 100 கிராம் அல்ஃபால்ஃபாவில் 130 – 142 மி.கி. அல்கலியை உண்டாக்கும் மூலப்பொருட்கள் உள்ளன. இதில் உள்ள மங்கனீஸ், ஜீரணத்திற்கும், இன்சுலீன் தயாரிப்பிலும் பயன்படுகிறது. சிறுநீர் பெருக்கும், ஜீரணசக்தியை அதிகரிக்கும். Peristalsis எனப்படும் வயிற்றின் தசைகளின் அசைவை அதிகப்படுத்துவதால், செரிமானம் நன்கு ஆகும்.
 • நீர்க்கோவை பாண்டுவிற்கு மருந்தாக அல்ஃபால்ஃபா பயனாகிறது.
 • இதய கோளாறுகளுக்கு அல்ஃபால்ஃபா இலைச்சாறு கொடுத்தால் நல்ல பலன் தெரியும். கேரட் சாறையும் சேர்த்துக் கொடுத்தால் நல்லது.
 • சைனஸ், சுவாசமண்டல கோளாறுகளுக்கும் இந்த மூலிகை தாவரம் பயனுள்ள மருந்து
 • மூட்டுவலி மற்றும் இதர ஆர்த்தரைடீஸ் வியாதிகளுக்கு சிறந்த மருந்து இதன் ‘டீ’ (கஷாயம்) யை 2 வாரங்களுக்கு தினம் 6 கப் பருகி வந்தால் ஆர்த்தரைடீஸ் குறையும். அமிலத்தை எதிர்க்கும் “அல்கலை” பொருளாக ஆல்ஃபால்ஃபா இருப்பதால் ஆர்த்தரைடீஸை குணப்படுத்தும்.
 • இலைகளில் பச்சையம் (Chlorophyll) அதிகமாக இருப்பதால் வர்த்தக ரீதியாக பச்சையம் எடுக்கப்படுகிறது. பூக்களிலிருந்து தேன் கிடைக்கும். விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணை, பெயின்ட் தயாரிக்க உதவும்.
 • உணவுடன் கூட்டுப் பொருளாக மாத்திரை, பொடி, டீ (கஷாயமாக) ரூபத்தில் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும்.
 • உயர் இரத்த அழுத்தத்திற்கும் அல்ஃபால்ஃபா மருந்தாகும்.

அல்ஃபால்ஃபா விதைகள் “முளை கட்டி”, சலாட் (Salad)

சூப்புகளில் உபயோகமாகிறது. இதன் இலைகளிலிருந்து சாறு எடுத்து பயன்படுத்தலாம். இதன் விதைகளை 1/2 மணிநேரம் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி உபயோகிக்கலாம். இதை தண்ணீர் அல்லது தேனுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

அருஞ் சொல் அகராதி

நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப்பொருட்களின் ஆங்கில வார்த்தைகள் பலருக்கு தெரிவதில்லை. எனவே வாசகர்களுக்கு உதவ, அருட்சொல் அகராதி ஆரம்பிக்கப்படுகிறது. இது மாதா மாதம் தொடரும்.


Spread the love