ஆகாச கருடன் கிழங்கு மூலிகை

Spread the love

ஆகாச கருடன் கிழங்கு என்னும் அதிசய மூலிகை

ஆகாச கருடன், கிழங்கு இனத்தை சேர்ந்த தாவரமாகும். இது அனைத்து நிலத்திலும் வளரக்கூடியது. இதில் தண்ணீர் தேங்கக்கூடாது. வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையது. காடுகள் மற்றும் மலைகளில் அதிக அளவில் காணப்படுகிறது.

இதன் கொடி  வாடினும் மழைக்காலத்தில் மீண்டும் வளரக் கூடியதாகும். இதன் கொடி மென்மையாகவும், இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். பூத்த மறுநாள் உதிரும் தன்மையுடையது. பின் பழுத்து சிவப்பாக மாறும். இது அதிக கசப்பு சுவை உடையதாகும். இது விதை மற்றும் கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

ஆகாச கருடன் கிழங்கை பூமியின் அடியிலிருந்து தோண்டி எடுத்த பின் கயிற்றில் தொங்க விட அது காற்று மற்றும் வெளிச்சத்தைக் கொண்டு மண் மற்றும் நீரின்றி கொடியாக படர்ந்து இலைகளுடன் வளரக் கூடியதாகும்.

எவ்வகை கொடிய நோயையும் நீக்கக்கூடியது என்பதால் இதற்கு கொல்லன் கோவை என்ற சிறப்பு பெயர் வந்தது. இதனை வீடுகளில் கட்டி தொங்க விட இதன் வாசனை காரணமாக விஷ பூச்சிகள் ஏதும் வராது என்று கூறப்படுகிறது.

தாவர விபரம்

மூலிகையின் பெயர்ஆகாசகருடன் கிழங்கு
தாவரப்பெயர்CORALLO CARPUS
தாவரக்குடும்பம்CUCURBITACEAE
வேறு பெயர்கள்பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை
பயன் தரும் பாகங்கள்கிழங்கு, இலை
காணப்படும் இடங்கள்  தமிழ்நாடு, ஆப்பிரிக்கா

மருத்துவ பயன்கள்

பாம்பு கடிக்கு

ஆகாச கருடன் கிழங்கு எலுமிச்சைபழம் அளவிற்கு நறுக்கி சாப்பிட வாந்தி, பேதி ஏற்பட்டு நஞ்சு முறியும். பாம்பு கடித்தவர்களை 24 மணி நேரத்திற்கு தூங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வாத நோய்க்கு

ஆகாச கருடன் கிழங்கு பொடி, 100 மில்லி அளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சி காலை, மாலை என சாப்பிட சீதபேதி தீரும்.

100 கிராம் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம் சேர்த்து நன்கு அரைத்து இதனை விளக்கெண்ணெய் ஊற்றி  வதக்கவும். பின் இளஞ்சூட்டில் கீழ வாதத்திற்கு பற்றுப்போட குணமாகும்.

மூட்டு வலி நீங்க

ஆகாச கருடன் கிழங்கின்  இலையை மூன்று கைப்பிடி அளவு எடுத்து அதனை பொடியாக நறுக்கி விளக்கெண்ணெய் சேர்த்து  பக்குவமாக வதக்கவும்.

பின் இதனை சுத்தமான துணியில் வைத்து கட்டி தாங்கும் அளவு சூட்டுடன் கை, கால், மூட்டுகளில் வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க நல்ல பலனை காணலாம்.

சீதபேதி நீங்க

ஆகாச கருடன் கிழங்கு பொடியை ஐந்து கிராம் அளவு எடுத்து அதனை 100 மில்லி நீரில் கலந்து நன்கு காய்ச்சவும். இதனை காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர சீதபேதி நீங்கும்.

மண்ணுளி பாம்பு விஷம் முறிய

மண்ணுளி பாம்பு நக்குவதால் பல நோய்கள் உருவாகின்றது. இதன்  விஷம் உடலில் பாய்ந்த உடன் பாதிப்பு வெளியே தெரிவதில்லை. சிறிது சிறிதாகப் பரவி வெண்குட்டம், கருமேகம் போன்ற நோய்களை உண்டாக்குகிறது.

இதற்கு ஆகாச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி அதனை பொடியாக நறுக்கி வெயிலில் உலர வைக்கவும். பின் நன்கு இடித்து சல்லடையில் சலித்து பாட்டிலில் சேகரிக்கவும்.

இதனை தினசரி காலை, மாலை என இருவேளை 10 கிராம் அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வரவும். இவ்வாறாக தொடர்ந்து நாற்பது நாட்கள் உண்டு வர மண்ணுளி பாம்பின் விஷம் முறியும்.

பயன்படுத்தும் முறை

ஆகாச கருடன் கிழங்கை நன்கு அரைத்து அதனை கொட்டைப்பாக்களவு வெந்நீரில் கலக்கி தினம் ஒருவேளை என மூன்று நாள் தொடர்ந்து குடித்து வர நாய், நரி, குரங்கு, குதிரை, முதலை இவைகளின் விஷங்கள் முறியும்.

ஆகாச கருடன் கிழங்கு துண்டுடன் வெற்றிலை சேர்த்து சாப்பிட தேள், நட்டுவக்காலி கடிப்பதால் உண்டாகும் விஷங்கள் முறியும்.

ஆகாச கருடன் கிழங்கை எண்ணெயாக தயாரித்து அதனை சரும நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இதனை சித்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி பயன்படுத்தவும்.

கண்டமாலை, தொடை வாளை, கழலைக் கட்டிகள் அரையாப்பு, இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் ஆகியவை  மீது ஆகாச கருட கிழங்கின் இலையை நன்கு மையாக அரைத்து தடவி வர அவை பழுத்து உடையும். இரத்தம், சீழ் நீங்கும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love