உடைகளில் மட்டுமன்றி உணவு வகைகளிலும் மக்கள் தங்கள் பாரம்பரியப் பழக்கவழக்கங்களிலிருந்து விலகிப் புதிய முறைகளைப் பின்பற்ற முன் வந்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான் சீன உணவு (Chinese food) மோகம். சீன உணவுகளுக்கும், ருசிக்கும் ஆட்பட்ட ஒரு பெரிய ரசிகர் வட்டாரமே உண்டு.
உணவுகளில் புலால் மணம் நிறைந்நிருக்கவும், சுவையை அதிகரிக்கவும் சீன உணவில் சிலவகை உணவுச் சேர்ப்பிகள் (food additives) சேர்க்கப்படுவதுண்டு. அவற்றில் ஒன்று தான் அஜினமோட்டோ (Ajinomotto) என்றழைக்கப்படும் சோடியம் குளுட்டாமேட் (sodium glutamate) இந்த அஜினமோட்டோ கணயத்தைத் தூண்டி விட்டு இன்சுலின் சுரப்பை அதிகரித்து விடுகிறது. இதனால் இரத்த குளுகோஸ் அளவு பாதிக்கப்படுவதுடன்
(Diabetes) எனப்படும் நீரிழிவு நோயையும் எவருக்கும் தெரியாமல் ஏற்படுத்திவிடுகிறது.
சோடியம் குளுட்டாமேட் மைய நரம்புமண்டலத்தில் காணப்படும் நியுட்ரல் ட்ரான்ஸ் மீட்டர்களைத் தூண்டக்கூடியவை என்று பல அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இருந்த போதிலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் தாமதமாகவே ஏற்பட்டதால் இது தொடர்ந்து பயன் படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
குளுட்டாமேட் (glutamate) கணயத்திலுள்ள ஏற்புச் செல்களுடன் (receptor cells) பிணைந்து கணயத்தைத் தூண்டி இன்சுலின் அதிக அளவில் சுரக்கும் படி செய்கிறது. அதனால் இயல்பான இரத்தக் குளுகோஸ் (normal glucose level) சிதைவுற்றுப் போகிறது என்று பிரான்சிலுள்ள மருந்தியல் மற்றும் அகச் சுரப்பியியல் மையத்தைச் (cenre for pharmacology and endocrinology) சேர்ந்த டாக்டர். ஜோயஸ் போக்கேர்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஸான்டார் எர்டோ (sandor erdo) எனும் ஹங்கேரிய அறிவியலாரின் ஆய்வுகளின்படி குளுட்டாமேட் கணயம் மட்டுமன்றி, ஹார்மோன்கள் சுரக்கும் பீனியல் சுரப்பி, அட்ரீனல் போன்றவைகளுடன் இணைந்து வினைபுரிந்து பலதீங்குகளை உண்டு பண்ணுகிறது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
எனவே சுவையை மட்டும் பெரிதென்று எண்ணித் தொல்லைக்கு ஆட்படாமல் தொல்லைதரும் அஜின மோட்டோவைத் தொடாமல் இருப்பது தான் அறிவார்ந்த செயல்.
உணவுநலம் ஜனவரி 2014