அக்மார்க் முத்திரை என்பது என்ன..?

Spread the love

நீங்கள் கடையில் என்ன வாங்கினாலும், இது அக்மார்க் முத்திரையிடப்பட்ட பொருளா என்று பார்த்து வாங்குங்கள் என்று விளம்பரத்தை டிவியிலும் பத்திரிகைகளிலும் பார்த்திருப்பீர்கள். இந்த அக்மார்க் முத்திரை தான், ஒரு பொருளின் தரத்தை உறுதி செய்வதாகும். தரத்தினைப் பற்றிய விழிப்புணர்வு, நம்மிடையே வேண்டும்.

கலப்படம்…

உடலுக்குத் தீங்கு செய்யக்கூடிய பொருட்களை உணவுப் பொருட்களுடன் சேர்ப்பதுதான் கலப்படத்தை பற்றிய பொதுவான கருத்து. கலப்படத்தை நான்கு வகைப்படுத்தலாம்.என்னென்ன வகைகள் என்று பார்க்கலாம்.

முதல்வகை…

வேண்டுமென்றே செய்யப்படும் தீமை ஏற்படுத்தக் கூடிய கலப்படம்.

இவ்வாறு செய்வதால்,நாளடைவில் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். உதாரணமாக, நெய்யில் மிருகங்களின் கொழுப்பு சேர்க்கப்படுவதால் இதய கோளாறு உண்டாகும். மசாலாப்பொடி வகைகளில் செயற்கை நிறம் சேர்க்கப்படுவதால், புற்றுநோய், வயிற்றுகோளாறுகள், கருச்சிதைவு ஏற்படுகின்றது.

இரண்டாவது வகை

இயற்கையாகவே நிகழும் ஏற்படுத்தக் கூடிய தீமை ஏற்படுத்தக் கூடிய கலப்படம். உதாரணமாக, நிலக்கடலையை அறுவடையை செய்து அதனை பதப்படுத்தும்போது, ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, பூஞ்சாணம் வளர்வதால் அப்லோடாக்ஸின் என்ற ஒரு நச்சுப் பொருள் உருவாகி உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

மூன்றாவது வகை…

வேண்டுமென்றே செய்யப்படும் தீமை ஏற்படுத்தாத கலப்படம். இந்த வகை கலப்படத்தினால் தீங்கு ஏதும் ஏற்படாது என்றாலும், நமக்கு வேண்டிய கருத்துக்கள் நமக்கு கிடைக்காமல் போகின்றன. மேலும்,இது பண விரயத்துக்கும் வழிவகுக்கின்றது. உதாரணம், பாலில் தண்ணீர் சேர்ப்பதை சொல்லலாம்.

நான்காவதுவகை…

அறியாமல் செய்யப்படும் தீமை ஏற்படுத்தக் கூடிய கலப்படம் நான்காவது வகை.உதாரணத்திற்கு, புட் கிரேட் அல்லாத பிளாஸ்டிக் பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தும்போது, உணவில் நச்சுப் பொருள் சேர்ந்து பல பாதிப்புகள் உண்டாகின்றது.


Spread the love