மூப்படைவதால் ஆணானாலும், பெண்ணானாலும் பல பாலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வயது ஏற, ஏற பல எண்ணங்கள் மாற்றங்கள் ஏற்படுவது போல பாலியலிலும் உறவிலும் பல மாற்றங்கள் ஏற்படும் இவை தவிர்க்க முடியாதவை.
சிறிது சிறிதாக ஏற்படும் இம்மாற்றம் காலப்போக்கில் உணரப்படுவதில்லை. ஆனால், நாற்பதுகளைத் தாண்டுகின்ற பொழுது பல வித்தியாசங்கள் உணரும் வகையில் அமைகின்றது. மண வாழ்வில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.
ஆனால் நாற்பதுகளைத் தாண்டும் பொழுது தான் அவை உணர்வு பூர்வமாக உணரப்படுகின்றது. சில கால கட்டங்களில் இது நோய்களின் தாக்கத்தால் (நீரிழிவு, இரத்த அழுத்தம்) நாற்பதுகளைக் கடக்கும் முன்னறே கூடவும் உணரப்படலாம்.
ஆண்கள்: ஆண்களின் பாலுறவு வேகம் குறைவது
வெளியேறும் விந்தின் அளவு குறைவது: இவைகளால் எந்த ஒரு மாற்றமும் உடலுறவில் ஏற்படாது.
விந்து முந்துமோ என்ற பயம் ஏற்படுவது: இது உண்மையல்ல ஏனெனில் வயது ஏற ஏற விந்து காலம் தாழ்த்தி தான் வெளியேறும்.
விந்து காலம் தாழ்த்தி வெளியேறுவது: இது தவிர்க்க முடியாதது. ஏனெனில் வயது ஏற, ஏற உறுப்புகளின் தசைகள் நரம்புகள் மூப்படைவதால் விந்து காலம் தாழ்த்தி தான் வெளியேறும்.
விரைப்புத்திறன் குறைவது: உறுப்புகளின் தசைகள் மற்றும் நரம்புகளின் மூப்படைவதால் விரைப்புத் திறன் குறைவது இயல்பே.
விரைப்புத்தன்மை சிறிது நேரமே இருப்பது: உறுப்புகள் இரத்த ஓட்டத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாததால் இது ஏற்படுகின்றது.
உச்ச கட்டத்தை அடைய எடுக்கும் நேரம் அதிகமாவது: ஆண்கள் 16&-18 வயதில் 10 நிமிடங்களில் உச்சக்கட்டத்தை அடைய முடியும் என்றால் அதுவே 40-&50 வயதினை கடக்கும் பொழுது 20&-25 நிமிடங்களாகவும் அதன் பின்னர் அதைவிட அதிக நேரமும் எடுக்கலாம்.
பெண்கள்
உறவிற்கு தயாராவதில் கால தாமதம்: இளம் பெண்கள் 10-&30 நொடிகளில் பாலுறவிற்கு தயாராகலாம். ஆனால், அதுவே மாதவிடாய் முடிந்த 45 வயதைக் கடந்த பெண்கள் 3 நிமிடங்களுக்கும் மேலாக எடுக்கலாம். (உறுப்புகளில் ஈரத்தன்மை உண்டாக அதிக நேரம் எடுக்கும்).
மார்பகங்களின் உணர்ச்சி நிலை: பெண்களுக்கு வயது ஏற, ஏற மார்பகங்களையும் அதன் காம்புகளும் உணர்ச்சியை சிறிது இழக்க நேரிடலாம். ஆனால், இது பெரிதும் பெண்களை பாதிப்பவை அல்ல.
உணர்ச்சியை உணரக்கூடிய அங்கங்கள்: பெண்களுடைய உணர்ச்சி அங்கங்களில் மாற்றம் பெரிதும் இல்லையெனிலும் அதிக நேரம் செலவழித்தால் தான் உணர்ச்சியை உணர முடியும் தன்மை வயது ஏற, ஏற ஏற்பட்டு விடும்.
உறவில் ஈடுபாடு குறைவு: பெண்களுக்கு வயது ஏற, ஏற அவர்களுடைய சக்தி திறன் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அவர்களுக்கு பாலுறவில் ஈடுபாடு குறைந்து கொண்டே போகின்றது.
முகம் சிவப்பதில்லை: சில பெண்களுக்கு உடலுறவில் உச்சக்கட்டத்தை அடையும் பொழுது அவர்களது மார்பகங்களும் முகமும் அதிக இரத்த ஓட்டத்தால் சிவக்கும். இது வயது ஏற, ஏற ஏற்படுவதில்லை.
வலி ஏற்படுவது: பெண்களின் இன உறுப்பில் இரு புறமும் தடித்த உதடுகள் போன்ற அமைப்பு உள்ளது. இவை தான் பாலுறவை அதிக வளவளப்பு தன்மையுடன் வலியில்லாமல் இலகுவாக நடைபெற உதவுகின்றன இவை வயது ஏற, ஏற தனது தடித்த உருவத்தை இழந்து மெலிந்து விடுகின்றன. இதனால் வளவளப்புத்தன்மை குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் பாலுறவின் போது வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
காலப்போக்கில் உடலிலும் உள்ளத்திலும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றை உள்ளத்தின் சிந்தனைகளைக் கொண்டும் சீராக்கலாம். நோய்களின் தன்மையை கட்டுப்படுத்தியும் சீராக்கலாம். பக்க விளைவுகளற்ற ஆயுர்வேத மூலிகை மருந்துகளை பயன்படுத்தியும் சீராக்கலாம். அவ்வாறு சீராக்கினால் வாழ்க்கையை மேலும் பல பயனுள்ளதாக மாற்றலாம். நன்கு அனுபவிக்கலாம்.
ஆயுர்வேத பாலுறவு ஊக்கிகள் பல வடிவங்களிலும் விதங்களிலும் கிடைக்கின்றன. இவை முற்றிலும் மூலிகைகள் மட்டுமே அடங்கியவை. பாதுகாப்பானவை. பக்க விளைவுகளற்றவை. இவற்றை நம்பிக்கையுடன் உபயோகிக்கும் பொழுது இவை உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி அவற்றின் செயல்பாட்டினை ஊக்கப்படுத்தி பாலுறவில் விருப்பத்தையும் செயல்திறனையும் தூண்டி இளமைத்துடிப்பு என்றென்றும் தொடர உதவுகின்றன. ஆயுர்வேத மூலிகை தயாரிப்புகளை பயன்படுத்தினால் இளமையான சிந்தனையுடனும் இளமையான செயல்பாடுடனும் அனைவரும் இருக்கலாம்.