முதுமையும் உணவுக்குழல் குறைபாடுகளும்

Spread the love


ஐம்பது வயதைக் கடக்கிறவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும். ஏதாவதொரு நோயின் பிடியில் அகப்பட்டு விடுவார்கள். நோய் வந்த பின்பு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் நடையாய் நடந்தே முதுமையில் பாதிப்பை செலழித்து விடுவார்கள்.

உடம்பில் (ageing and the esophagus)

உறுப்புகளில் ‘அது ரிப்பேர்’ ‘இது ரிப்பேர்’ என்கிற அச்சுறுத்தும் சொற்களை பெரும்பாலும் ஐம்பது வயதைக் கடக்கிறவர்கள் கேட்க நேரிடுவதைத் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.


பொதுவாகவே அறுபது வயதைக் கடந்தவிட்டால் பசி குறைதலும், சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் தரும் வயிற்று வலியும், அவற்றால் ஏற்படும் மலச்சிக்கலும் முதுமையின் நிம்மதியை குறைக்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால் தான் அறுபது வயதைக் கடந்தவர்களின் கூட்டம் மருத்துவமனைகள் இரைப்பை, குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வு என்பது போல அறுவை சிகிச்சையைத் தவிர்க்க வேண்டுமானால் இவை தொடர்பான விழிப்புணர்வு மிக மிக அவசியம்.


உணவுக்குழாய் தொல்லைகள்


முதியவர்கள் உணவு உண்ணும் போது உணவுக்குழாய் வழியே செல்லும் உணவு அடைப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது வழக்கம். அதற்குச் சில காரணங்கள் உண்டு. உணவுக்குழல் சுருங்கி விரியம் தன்மையைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் தளர்ச்சியடைவதால் உணவு உண்ணும் போது நெஞ்சில் ஒருவித அடைப்பு ஏற்படுத்துவதுண்டு. மார்பு வலியும் உண்டாவதுண்டு. இனம் புரியாத ஒரு துன்பம் உண்டாகலாம். இந்த வலி சில சமயங்களில் இதய நிறுத்தம் போலவே இருக்கும். பேரியம் மாவு கொடுத்துப் படம் எடுத்துப் பார்த்தோ உள்நோக்கிக் குழலை உணவுக்குழலில் செலுத்தியோ எளிதில் இந்நோயைக் கண்டு கொள்ளலாம். இந்நோய்க்கு அறுவை சிகிச்சையின்றி மருந்தினாலேயே நல்ல முறையில் சிகிச்சையளிக்க சிலருக்கு இரைப்பை அமிலம் உணவுக் குழலுக்குள் செல்வதால் அவ்விடத்தில் புண் உண்டாவதுண்டு. அதனால், நெஞ்சு எரிச்சல், உணவு உட்கொள்ளும் போது அடைப்பது போன்ற தொல்லை, வாந்தி, வாயில் அதிகமாக நீர் சுரத்தல் முதலான துன்பங்கள் ஏற்படும். உரிய மருந்தினைத் தொடர்ந்து உண்டால், இந்நோய்களை எளிதாகப் போக்கலாம். இந்நோயாளி உறங்குவதற்கும் முன் உணவு உண்ணுதல் உயரமாக இருத்தல் வேண்டும். சிலருக்கு உதரவிதானம் வழியாக இரைப்பை நெஞ்சுக்குள் செல்லுதல் ஏற்படுவதுண்டு. அனால் பலருக்கு முதுமையில் இந்நோய் எவ்விதத் தொல்லையும் தராமலும் இருக்கும். உடல் பருமன் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் இந்நோய் அதிகமாக வருவதுண்டு, இந்நோயாளிக்கு நெஞ்சில் அடைப்பும், எரிச்சலும் இருக்கும். வாந்தியும் வருவதுண்டு.வயிற்றுப் புண்ணும் ஏற்படலாம். இத்தொல்லைகள் முன் பக்கம் உடல் சாயும் போதும், சரிசமமாய்ப் படுக்கையில் (தலையணையின்றி) படுக்கும் போதும், உணவினை அதிகமாய் உண்ட பிறகு, அதகமாக இருக்கும். இரைப்பையிலிருந்து சிறிது சிறிதாக இரத்தம் கசியும். இதனால் இரத்தச் சோகையும் ஏற்படலாம். இந்நோயையும் பேரிய மாவு கொடுத்துப் படம் எடுத்து எளிதில் கணடுபடிக்கலாம்.


கீழ்க்காணும் சிகிச்சை முறைகளால் இத்தொல்லைகளைப் போக்கலாம்.
அதிக கொழுப்புள்ள உணவினை குறைக்க வேண்டும்.
உண்ணும் உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.
பருத்த உடலினர் எடையைக் குறைக்க வேண்டும்.


தலையும், உடலும் அடிக்கடி முன்புறமாய் வளைதலை தவிர்க்க வேண்டும்.
படுக்கையின் தலைப்பகுதி சற்று உயர்வாக இருக்க வேண்டும். உரிய மாத்திரையைத் தொடர்ந்து உண்ண வேண்டும். இரத்தச் சோகை உள்ளர் இரும்புச் சத்துள்ள மாத்திரையை உண்ண வேண்டும். இவைகளை நடைமுறைப்படுத்து பலன் எபற இயலாமல் போகும் தருணத்தில் அறுவை சிகிச்சை வாயிலாக முழுநலம் பெறலாம். ஆகஸ்டு&திருவாசக தெள்ளமுது

ஆயுர்வேதம்.காம்


Spread the love