வயதும், போதையும் செக்ஸ் உறவும்

Spread the love

ஆண்கள் எந்த வயது வரையிலும் செக்ஸ் உறவில் ஈடுபட முடியும்? என்று கேட்டால், செக்ஸ்க்கு வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை. வயது, வீரியம், ஆசை, செக்ஸ் செயல்பாடு இவை அனைத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

நாற்பது வயதைத் தாண்டிய மனைவிகள், குடும்பச்சுமை, மனக்கவலை, அதிக வேலை செய்த காரணத்தால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு, கணவனுக்குப் பணிவிடை மட்டும் செய்யும் தகுதியுடன் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் அறுபது வயதிலும் உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்கள். சில ஆண்கள் மட்டுமே சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் காரணமாக வீரியத்தன்மை குறைந்து காணப்படுகிறார்கள்.இவர்களுக்கும் செக்ஸ் ஆசை துளிர்விட்டாலும், செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. ஆனால், தொடு உணர்ச்சிகள் மூலம் தங்களது தாபத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள்.

இதுதவிர, வயதான ஆண்கள் புற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பது உண்டு. ஆனால், உடலுறவு எனப்படும் புணர்ச்சியில்தான் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மேலும், பெண்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இள வயதானவர்களைவிட வயதான ஆண்களிடமே அதிகம் காணப்படுகிறது. இந்த நிலைதான் பெண்களுக்கு அதிகத் திருப்தியும், அதிக எண்ணிக்கையில் உச்சகட்டமும் ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும், மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. செக்ஸ் என்பது ஆண்-பெண் இருவரின் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம்.

உடல் அளவில் பார்த்தால், ‘டெஸ்ட்ரோஜன்’ என்ற ஹார்மோன் அளவைப் பொறுத்தே அமைகிறது. இது ஆண்-பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது.

போதைப் பொருள்கள், உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்கச்செய்யும் தன்மை கொண்டவை. அதேபோல், செக்ஸ் நடவடிக்கைகளில் போதைப் பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும்போது, உடல் தன் நிலையை மறந்துவிடத் தொடங்குகிறது. போதைப் பொருள்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும், உச்சகட்டத்தைப் பெறவும் உதவாது. சில சமயங்களில், உச்சகட்ட நிலை ஏற்படுவதையே தடுத்துவிடும் ஆற்றல் படைத்தவை.

சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு அதிக வேகத்தில் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல், சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு, உறவின்போது உறுப்பில் வழுவழுப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சித்தன்மை ஏற்படுகிறது. இதற்கு, சிகரெட்டில் உள்ள ‘நிகோடின்’தான் காரணம். மன உளைச்சலைக் குறைக்கும் சில மருந்துகளுக்குக்கூட இந்தத் தன்மை உள்ளது. இப்படிப்பட்ட மருந்துகளை உள்கொள்ளும்போது, செக்ஸ் உணர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

போதைப் பொருள்களைப்போலவே மதுவும் உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், நாள்கள் செல்லச்செல்ல, நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும். குறிப்பாக, அதிக அளவில் மதுவை உள்கொள்ளும்போது, அவர்களை மயக்கம் அடையச் செய்து என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் மாற்றிவிடுகிறது. செக்ஸில் உச்சக்கட்டத்தை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. எனவே, மது அருந்தியவர்கள் செக்ஸில் ஆர்வமாக ஈடுபடமுடியும் என்பது மட்டும் உண்மை. ஆனால், செக்ஸ் செயல்பாடு முடிந்தபிறகு போதிய மகிழ்ச்சி இருக்காது.

செக்ஸ் செயல்பாடுகளில் ஆண்-பெண் இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், மது அருந்திய ஆண், அவனது ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பானே தவிர, தன்னுடைய இணையின் ஆசைகளைத் தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டான். அதனால், குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு முழுமையான செக்ஸ் இன்பம் கிடைப்பதில்லை. குடிபோதையில் மிகச்சிறப்பான முறையில் செக்ஸ் அனுபவித்ததாக ஆண்கள் நினைத்துக்கொள்ளலாமே தவிர, உண்மையில் எதுவும் இருக்காது.

போதைப் பொருள்களைத் தவிர்ப்பது செக்ஸ§க்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயன் அளிக்கக்கூடியதாகும்.


Spread the love