உடலின் உறுப்புக்கள் குழந்தையாக இருக்கும் போது சிறியவையாகவும், வளர, வளர, பெரியதாக மாறும். இதற்கு விதி விலக்கு அடினாய்டும், டான்சில்களும். பிறப்பிலிருந்து 10-12 வயதுவரை அடினாய்ட் திசுக்கூட்டம் வளர்ந்து உச்ச அளவை அடையும். பிறகு சுருங்க ஆரம்பித்துவிடும். வளரும் போதுதான் அடினாய்ட் பிரச்சனைகளை உண்டாக்கும்.
அடினாய்ட், டான்சில் என்றால் என்ன?
மூக்கின் பின்னால் மூக்குக் குழியில் உள்ளது அடினாய்ட் டான்சில்கள் தொண்டையின் (வாயின் பின்புறம்) இருபக்கமும் ஜோடியாக அமைந்துள்ளது. அடினாய்ட் Pharyngeal tonsils என்றும் சொல்லப்படும். இந்த இரண்டு அவயங்களுமே, அடினாய்டும், டான்சிலும் ஒரே மாதிரியான நிணதிசுக்களால் உருவாக்கப்பட்டவை. அடினாய்டை வாய்வழியாக பார்க்க முடியாது.
இந்த இரண்டு நிண தசைகளில் உள்ள திசுக்கள் லிம்போஸைட் (Lymplocyte) என்ன ஒரு ரக வெள்ளை அணுக்கள் நிறைந்தவை. இதனால் உடலில் ஏற்படும். தொற்றுகளை தடுக்கின்றன. இந்த மாதிரி நோய்களை எதிர்த்து போராடும் போது இரண்டுமே வீங்கி விடும். இந்த வீக்கம் தொற்றுநோய் அகன்றதும், ‘நார்மல்‘ அளவுக்கு திரும்பிவிடும். சில சமயங்களில், குறிப்பாக குழந்தைகளில் இந்த வீக்கம் நிலை கொண்டுவிடும். சிறுவர்களுக்கு அடிக்கடி தொற்றுநோய் வரலாம். இதனால் டான்சில் சதை வளர்ந்துவிட்டுது என்று டான்சில்களை அடினாய்டையும் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவிடுவது வழக்கத்திலிருந்து வந்தது.
சமீபத்திய ஆராய்ச்சிகள் சொல்வது டான்சில், அடினாய்ட் சதைகள் உடலை தொற்று நோய்களுக்கு தடையாக செயல்படுகின்றன. இதனால் டான்சில்களை எடுக்கக்கூடாது என்ற கருத்து நிலவி வருகிறது.
தொண்டையை Pharyngites என்ற தொற்று தாக்கும்போது, கூடவே டான்ஸில்களும் பாதிக்கப்ட்டு வீங்கும். இதை டான்சிலைட்பீஸ் (Tonsillitis) என்பார்கள். இது சிறு வயதினரை அதிகம் தாக்கும். பாக்டீரியா, வைரஸ் இவற்றால் ஏற்படுகிறது இந்த பாதிப்பு.
யானை வருமுன்னே மணியோசை கேட்டது போல் ஜுரம், ஜலதோஷம் வருமுன்பு தொண்டை உலர்ந்து போவது, தொண்டை கட்டுவது இவைகளால் டான்ஸில்கள் எச்சரிக்கை கொடுக்கின்றன. இதேபோல மூக்கின் வழியே வரும்காற்றில் உள்ள கிருமிகளை காட்டிக் கொடுகிறது அடினாய்ட் சதை.
டான்சிலைடீஸ்ஸின் அறிகுறிகள்
பல அடினாய்ட், டான்சில் வீக்கங்கள் அறிகுறிகள் ஏதும் உண்டாக்காது. இந்த மாதிரி அறிகுறியில்லாத வீக்கங்கள் ‘நார்மல்‘ என்கிறார்கள் சில மருத்துவர்கள்.
தொண்டைப் புண், உணவை முழுங்குவதில் சிரமம், தொண்டை கட்டுதல்
குளிர்ஜுரம்
தீவிரமானால் காதுகள் பாதிக்கப்படும். சை¬ஸ் பிரச்சனைகள் தலை தூக்கும். மூக்கிலிருந்து உதிரப்போக்கு ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு தூங்கும் போது குறட்டை ‘நோய்‘ உண்டாகலாம் இதை obstructive sleep apnea என்பார்கள். தூங்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படும்.
டான்சில் வீக்கம் போலவே அடினாய்ட்டு சதையும் வளர்ந்து பெரிதாகி, மூக்கின் பாதையை அடைக்கும். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வாயால் சுவாசிக்க ஆரம்பிப்பார்கள். இதனால் பற்கள் வெளியே துருத்திக் கொண்டு வாய் வெளியே தெரியும். முகமே மாறும். இதை adenoid face என்பார்கள்.அடினாய்டு வீக்கத்தால் குரல் மாறும்.
தலைவலி, கழுத்து நரம்புகள் புடைத்துக் கொள்ளுதல்
குழந்தைகள் களைப்படைந்து இளைத்துப் போகும். மூக்கடைப்பால் இரவில் சரியாக தூங்க முடியாது.
மேற்சொன்ன தொல்லைகளால் முன்பெல்லாம் அடினாய்டும்,
டான்சில்களுக்கு அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டு வந்தன. முற்காலத்திய கருத்துகள் – டான்சில் தேவையில்லாத அவயம், அதுதான் குழந்தைகள் அடிக்கடி ஜுரத்தால் பாதிக்கப்படுகின்றனர். டான்சிலை எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் – இவை தவறான முடிவுகள். டான்சில், அடினாய்டு இவற்றை நீக்குவது பற்றி டாக்டர் தான் முடிவு செய்ய வேண்டும். அதேசமயம் இந்த பாதிப்புகளுக்கு சிகிச்சை செய்யாவிட்டால் ருமாடிஸ ஜுரம் ஏற்படும் அபாயம் நேரிடும்.
ஆயுர்வேத முறைகள்
ஆயுர்வேத ஆசான்களில் ஒருவரான சுஸ்ருதர் அடினாய்டு, டான்சில் கோளாறுகள் கபதோஷத்தால் ஏற்படுகின்றன என்றார். அடிக்கடி ஏற்படும் அடினாய்ட் / டான்சில் நோய்கள் பிற்காலத்தில் ஏற்படும் வியாதிகளுக்கு காரணமாகலாம் என்று ஆயுர்வேத வைத்தியர்கள் கருதுகின்றனர். இதனால் ஆயுர்வேதத்தில் உடலின் நோய் தடுப்பு சக்தி முதலில் கவனிக்கப்பட்டு, சீராக்கப்படுகிறது.
நிவாரணங்கள்
சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி மற்றும் கருமிளகு பொடி சேர்த்து பருகவும். இதை தொடர்ந்து 10 நாட்களுக்கு குடிக்கலாம்.
முன்கழுத்தின் சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.
சுடுநீரில் உப்பு கலந்து கொப்பளிப்பது (Gargle) அநேகமாக அனைவரும் அறிந்தது. முதலுதவி. இத்துடன் கருவேலம் பட்டை கஷாயத்தை சேர்த்து கொப்பளிக்கலாம். இந்த கருவேலம் பட்டை கஷாயம் 8 வயதுக்கு மேல்பட்டவர்கள் உபயோகிக்கலாம்.
நிறைய சூடான திரவ ஆகாரங்களை – சூப், டீ – எடுத்துக் கொள்ளவும்.
தலைக்கு குளிப்பதை தவிர்க்கவும்
டான்சிலைஸுக்கு ஆயுர்வேத மூலிகைகள்
மஞ்சள், ஆடோதோடை, சீந்தில், மணத்தக்காளி, பூண்டு, இஞ்சி, துளசி, இலவங்கம், நெல்லி, அமுக்கிரா, வேம்பு, சிலாஜித், அதிமதுரம், சதவாரி, போன்றவை.