கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கபத்தால் உண்டாகும் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்பட்டு வரும் மூலிகை ஆடாதொடை ஆகும். பழங்கால நூல்களில், இந்த தாவரம் ஒரு முக்கியமான மூலிகையென குறிப்பிடப்படுகிறது. நம்நாட்டு தாவரமான இந்த மூலிகை, நம் தேசம் எங்கும் வளருகிறது; குறிப்பாக இமயமலை சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் “ஆடாதொடை” என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன.
ஆடாதொடை ஒரு அடர்த்தியான, ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் செடி. கோள வடிவமுள்ள இலைகள் 10 – 16 செ.மீ. நீளமுடையவை. இலைகளில் மெல்லிய நூல் போன்ற முடிகள் இலை அமைப்பு சூலம் போல் அகன்று, நுனியில் குறுகி இருக்கும். இலைகள் இளம் பச்சை நிறங்களில் இருக்கும். ஒட்டுமொத்தமாக, ஆடாதொடையில், வாசமுள்ள எண்ணை, பிசின்கள், கொழுப்புகள், கசப்பு வாசிசைன், சர்க்கரை, உப்பு இவைகள் உள்ளன.
ஆடாதொடையின் மருத்துவப் பயன்கள்:
இதயம், தொண்டை பாதிப்புகளுக்கு ஆடாதொடை மருந்தாகிறது. கபத்தைக் கட்டுப்படுத்தும்.
கோனேரியா போன்ற பாலியல் நோய்களுக்கு ஆடாதொடை வேர்கள் மருந்தாக பயன்படுகின்றன. ஆடாதொடை பூக்கள், மஞ்சள் காமாலை நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தொண்டை கரகரப்பு, தொண்டை கமரல் போன்றவற்றிற்கும் தொடர் இருமலுக்கும் ஆடாதொடை உகந்தது. ஆடாதொடையை தொடர்ந்து உபயோகித்து வர குரல் இனிமையைப் பெறலாம்.
ஆடாதொடையிலிருந்து கிடைக்கும், வாசிசின் எனப்படும் பொருள், மூச்சுக்குழாய் அடைப்புகளை போக்குகிறது. கர்ப்பப்பையை ஊக்குவிக்கிறது. இதனால் பழங்காலத்தில் பிரசவம் பார்க்கும் செவிலியர்களால், சுலபமாக பிரசவம் ஏற்பட இந்த மூலிகையை பயன்படுத்தி வந்தனர்.
மூச்சுக்குழல் சம்பந்தமான வியாதிகளுக்கு ஆடாதொடை இலைகள் பயன்படுகின்றன. சிகரெட்டைப் போல், இலைகளை சுருட்டி, பற்றவைத்து புகைபிடித்தால் ஆஸ்துமாவுக்கு நல்லது.
வீக்கங்களுக்காக ஆடாதொடை இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட கலவை சீக்கிரமாக காயங்களை ஆற்றும். ருமாடிஸம் உண்டாக்கும் வலிகளை குறைக்கும்.
மாதவிடாய்க் காலங்களில், ஏற்படும் அதிக உதிரப்போக்கை ஆடாதொடை கட்டுப்படுத்தும்.