அமிலம் 20 காரம் 80 அதுதான் நல்லது

Spread the love

நாம் உண்ணும் உணவை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று அமிலத்தை உண்டாக்கும் உணவுகள். இரண்டாவது காரத்தன்மையை உண்டாக்கும் உணவுகள். நல்ல ஆரோக்கியத்திற்கு உடல் ரத்தத்தில் அமில, கார விகிதம் 20 : 80 இருக்க வேண்டும். ஆனால் இந்த விகிதத்திற்கு தலைகீழாக நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை அதிகம். அதிக அமிலத்தை சரி செய்ய காரத்தன்மை உள்ள உணவுகள் தேவை.

பொதுவாக தானியங்கள், பருப்புகள், கொழுப்புகள் (மாமிசம், மீன், நெய், எண்ணெய்) மற்றும் டீ, காப்பி போன்றவை அமிலத்தை அதிகமாக்குபவை. காய்கறிகளும் பழங்களும் குடலில் காரத்தன்மையை உண்டாக்கி, அமிலத்தை குறைக்கின்றன.

அதிக அமிலம் முதுமையை சீக்கிரம் வரவழக்கிறது. களைப்பு, வலி, வாய்வு மற்றும் சர்ம நோய்கள் ஏற்படலாம். தூக்கமின்மை, தலைவலி, வாந்தி, நரம்புத்தளர்ச்சி இவைகளும் ரத்தத்தில் ‘அசிடிடி’ அதிகமானால் ஏற்படும்.

வளர்சிதை மாற்றத்தின் விளைவாக உண்டாகும் யூரிக் மற்றும் லாக்டின் அமிலங்களை, ரத்தத்தில் உள்ள காரத் தன்மையுள்ள நிணநீர், பித்த நீர் முதலியவை சமன் செய்து விடும். ஆனால் அதிக அளவு அமில உணவுகளை உட்கொண்டால் உடலால் சமன்படுத்தி சமாளிக்க முடியாது. எனவே நாம் நம் உணவில் அதிகமாக காரத்தன்மை உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அமிலத்தன்மை மிகுந்த உணவுகள்

கார்போஹைடிரேட்ஸ், புரத, கொழுப்பு உணவுகள் (தானியங்கள், பருப்புகள், மீன், நெய், எண்ணெய், தேநீர், காப்பி, மென்பானங்கள், சர்க்கரை, சுவை ஊட்டிகள், செயற்கை சர்க்கரை, புகையிலை, வறுத்த / பொரித்த, சாராயம், மசாலாக்கள், ஊறுகாய், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், வீர்யமான மலமிளக்கிகள் முதலியன.

அநேகமாக எல்லா காய்கறிகளும் (குறிப்பாக கீரைகள், முட்டைக்கோஸ்) பழங்களும் காரத்தன்மை உடையவை. கூடிய மட்டும் அதிக காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வறுத்த / பொரித்த உணவுகளை விட, நீராவியில் வேக வைத்த உணவுகளை உண்பது நல்லது.

உடலின் அமில, காரத்தன்மைகளை சரியான அளவில் வைக்க, அதிகமாக காய்கறிகளை (குறிப்பாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பட்டாணி, வெள்ளரிக்காய், பரங்கிக்காய்கள், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், வெங்காயம், பீன்ஸ், காலிஃப்ளவர் முதலியன) உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை, அரிசி, ஓட்ஸ், பார்லி, ரொட்டி, மீன், பருப்புகள் – இவற்றை குறைவாக அளவோடு உண்ணவும்.

காரத்தன்மை அதிகரிக்க சுலபமான வழி – பழ ரகங்கள் காய்கறி ரகங்களை பருகுவது.

காரத்தன்மை மிகுந்த
உணவுகள்

உணவ

பசும்
பால்

மோர்    

காய்கறிகள்

பசலைக்கீரை

வெள்ளரிக்காய்

பீட்ரூட்             

முள்ளங்கி

கேரட்

உருளைக்கிழங்கு

பட்டாணி 

முட்டைக்கோஸ்

காலிஃப்ளவர்

வெங்காயம்

பரங்கிக்காய்

பழங்கள்

ஆப்பிள்

அத்திப்பழம்

திராட்சை 

கரும்பு

தக்காளி  

எலுமிச்சை

ஆரஞ்ச்

பேரீச்சம்பழம்  

வாழைப்பழம்

மாதுளம்பழம்

தேங்காய்

தர்பூசணி 

அமிலத்தன்மை
மிகுந்த
உணவுகள்

உணவு   

அரிசி
(பாலிஸ்
செய்யப்பட்ட)

கைக்குத்தல்
அரிசி

கேக்

ரொட்டி

பார்லி

மைதா

சோளம்  

கோதுமை

சாக்லேட்

வேர்க்கடலை

பாதாம்பருப்பு

முட்டை
(மஞ்சள்
கரு)

முட்டை
(வெள்ளைக்கரு)

முட்டை

மாட்டு
மாமிசம்
           

சிக்கன்

மட்டன்

மீன்

சீஸ்

வெண்ணெய்               

https://www.youtube.com/watch?v=ytXDnv5FCyA

Mappillai Samba Rice

 
 
 
 


Spread the love