குப்பைமேனி தைலம்

Spread the love

குப்பைமேனி என்ற வார்த்தையை கேட்ட உடன் நமக்கு குப்பையில் நிற்கும் ஒரு செடி என்று தான் தோன்றும். அது சிறிது உண்மை தான், இந்த செடி பெரும்பாலும் சாலை ஓரங்களில் நிற்கும். இதனை கண்டால் மருத்துவ செடி என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால், இந்த செடிக்கு அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன.

இந்த செடி வளர விதை இட வேண்டாம், உரம் இட வேண்டாம். தானாகவே வளர கூடியது. அதனால் தான் இதன் அருமை நமக்கு தெரிவதில்லை. இது பார்ப்பதற்கு சிறிய செடியாக இருக்கும். இதன் இலைகள் முக்கோண வடிவத்தில் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் காய்களும் முக்கோண வடிவத்தில் இருக்கும்.

குப்பைமேனி தைலம்  

தேவையான பொருட்கள் 

குப்பைமேனி இலைகள்        –    3 கைப்பிடி

தேங்காய் எண்ணெய்          –   300 மி.லி

விளக்கெண்ணெய்             –     5  டீஸ்பூன்

செய்முறை

முதலில் குப்பைமேனி கீரையை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். பின்பு அந்த இலைகளை நன்கு கழுவி ஆய்ந்து கொள்ள வேண்டும்.

தண்ணீர் உலரும் படி காய வைத்து, மிக்சியில் போட்டு மையாக அரைத்து கொள்ள வேண்டும்.

அரைக்கும் போது தண்ணீரை சேர்க்க வேண்டாம்.

ஏனென்றால், குப்பைமேனிலேயே  போதுமான அளவுக்கு நீர் உள்ளது.

தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள குப்பைமேனி கீரையை சேர்த்து கொள்ளவும்.

பின்பு, அடுப்பில் வாணலியை வைத்து அதில் இந்த கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கழித்த பின் அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

பின்னர், அடுப்பை அணைத்து விட்டு அடுப்பில் உள்ள எண்ணெயை இறக்கி விடவும். இப்போது குப்பைமேனி தைலம் தயார்.

இந்த குப்பைமேனி தைலத்தை சருமத்தில் ஏற்படும் நோய்களுக்கு  மருந்தாக பயன்படுத்தலாம் மற்றும் வெட்டு காயங்களுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம்.

உடல் வலி உள்ளவர்கள் படுப்பதற்கு முன்பு வலி உள்ள இடங்களில் தேய்த்து விட்டு படுக்கலாம்.

பலமான வேலை செய்பவர்கள் உடல் வலியை குறைக்க இந்த எண்ணெயை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு  தேய்த்து விட்டு படுக்கலாம். இவ்வாறு செய்து வந்தால், உடல் வலி விரைவில் குறைந்து விடும்.


Spread the love