துத்தி

Spread the love

துத்தி உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு விளைகிறது. துத்தி இலைக்
கஷாயம் வாய் கொப்பளிக்க
பல்
ஈறு நோய்கள் குணமாகும். துத்திப் பூவின் சூரணம் கற்கண்டு சேர்த்து உட்கொள்ள
இரைப்பு
குணமாகும். துத்தி இலையை கசகசாவுடன்
அரைத்துப் பற்றுப் போட மூட்டு வலி குணமாகும். துத்திப்
பூ மற்றும் விதை ஆண்மை பெருக்கியாக செயல்படுகிறது.

துத்தி இலையை பருப்புச் சேர்த்து கடைந்து உண்ண மூலம் குணம்
பெறும். பசும் துத்தி
, கருந்துத்தி, சிறு
துத்தி
, பெருந்துத்தி, எலச்செவித்
துத்தி
, நிலத் துத்தி, கண்டு
துத்தி
, ஐயிதழ் துத்தி, ஒட்டுத்
துத்தி
, காட்டுத் துட்தி, கொடித்துத்தி,
பணியாரத் துத்தி, பொட்டகத்
துத்தி
, நாடத்துத்தி என்று பல வகைகள் உண்டு.
துத்தி இலையை
சின்ன வெங்காயத்தில் வதக்கி உண்டால்
மூலம் குணமாகும்.

பெண்களின் மாதவிலக்கு வலியை போக்க

ஒரு கைப்பிடி துத்தி இலையை ஒரு வேளை நீர்விட்டு அரைத்து
வடிகட்டிய சாறில்
, சுட்டு கரியாக்கிய வசம்பு கரியை ஒரு பட்டாணி அளவு எடுத்து கலக்கி,
வெறும் வயிற்றில் மூன்று நாள் குடித்து வர குணம் கிடைக்கும்.

மனிதனின் முதல் எதிரி மலச்சிக்கல் தான்

மனிதனின் ஆரோக்கியத்திற்கு முதல் எதிரி மலச்சிக்கல் தான்.
மலச்சிக்கல் இல்லாமல்
பார்த்துக்
கொள்ள பெரும்பாலான நோய்கள் மனிதனை தாக்குவது இல்லை. நவீன உணவுகளாக பீட்சா
, பர்கர், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட
உணவுகள்
, எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள்,
பேக்கரி உணவுகள் மலச்சிக்கலை உருவாக்குகின்றன. நவீன உணவுகள் செரிமானக் கோளாறை
உருவாக்குகின்றன. மலச்சிக்கலில் அவதிப்படுபவர்கள் துத்தில்
இலைகளை நன்றாகக் கழுவி, அதனுடன்
பாசிப் பருப்பைச்
சேர்த்து
சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர
மலச்சிக்கல் குணமாகும்.

மூல நோய் உருவாவதன் காரணம் என்ன?

நீங்கள் உணவில் புளிப்பு, காரம்
அதிகளவு சேர்த்துக்
கொள்வதால்
குடலில் அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் குடலில் வாயுக்கள் அதிகரித்து
, மூலக் குடலை அடைத்து, மூலத்தில்
புண் ஏற்பட்டு மூல
நோயாக
மாறுகிறது. மூல நோயினால் அவதிப்படுபவர்களுக்கு துத்தி சிறந்த மருத்தாகவும்
,
உணவாகவும் பயன்படுகிறது.

துத்தி இலைகளை பறித்து, நீர்
விட்டு அலசி
சுத்தம் செய்த பின்பு சிறிதாக நறுக்கிக்
கொள்ள வேண்டும். அதனுடன் பாசிப் பருப்பு
, பூண்டு,
சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டுத் தாளித்து கடைந்து வாரம் இருமுறை என மதிய
உணவிற்குப் பின்பு சாப்பிட்டு வர வேண்டும். மூலம் காரணமாக
ஏற்படும் பாதிப்புகள் சிறிது சிறிதாகக் குறைந்து பூரண
குணமடையலாம்.

,மூல நோய் கட்டி முளை, புழுப் பண்ணும் போகுஞ்,

சால வதக்கிக்கட்ட தையலே – மேலும்

அதை எப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ்

சாந்தமுரும். இப்படியீற்றுத் தியிலையை

என்று பதார்த்தக் குண சிந்தாமணி சித்த வைத்திய நூலில் பாடலில்
துத்தியின் மருத்துவக்
குணங்களைக்
கூறுகிறது. மூல நோய்க்கு மிகச் சிறந்த துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கிக்
கட்ட, மூல
முளைகள் மற்றும் புண்கள்
ஆறும்
என்று விளக்குகிறது. வதக்கிக் கட்டிய இலைகளினால்
, கட்டிகள்
பழுத்து
, உடைந்து ஆறும். துத்தி இலைகளை சாறு
எடுத்து
, பச்சரிசி மாவுடன் சேர்த்து களி போலக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி
வந்தால் கட்டிகள் விரைவில் குணமாகும்.

துத்தி இலையை நீர்விட்டு, கொதிக்க
வைத்து ஆறிய
பின்பு நீரினால் வாய் கொப்பளித்து வர,
பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் குணமாகும். உடலில் உள்ள
தசைகளுக்கு துத்தியானது
பலத்தைத்
தருவதால்
, அதிபலா என்ற பெயரும் இதற்குண்டு. இதன் இலையில் தாவரக்
கொழுப்பு மற்றும் பல வேதியல் பொருட்கள் இருக்கின்றன.
இதனால், பல சித்த மருந்துகளில் துத்தி சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

பூஞ்சை நோய் காரணமாக தோல் படர்தாமரை தோன்றும். இதற்கு துத்தி
இலையை அரைத்துப் பூசி
வர
குணம் பெறலாம். ஆசன் வாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி ஏற்படுகிறதா
?
வலி ஏற்படும் சமயம், துத்தி
இலை ஒரு கைப்பிடி அளவு
எடுத்து
அதை
100 மி.லி. நீரில் கொதிக்க வைத்து சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருகி வந்தால் குணம் பெறலாம். குடல் புண் மற்றும் சிறுநீர்
பிரியாமல் அவதிப்பட்டால்
, துத்தி இலைகள் மூலம் இரசம் செய்து அருந்தி வர சிறுநீர் சிரமம்
இன்றி எளிதாக வெளியேறும் சிறிநீரகம் சார்ந்த நோய்கள்
ஏற்படாது.

துத்தி இலை மற்றும் பூவை சம அளவில் எடுத்துக் கொண்டு
நீர்விட்டு மைபோல அரைத்து
மூலப்
பருக்கள் மீது பூசி வர பருக்கள் மறையும். பருக்கள் காரணமாக ஏற்படும் வீக்கம்
,
வலி நீங்கி பருக்கள் மறைந்து போகும்.

வயிற்றுப் போக்கு குணப்படுத்த உதவும்
துத்தி இலை

அஜீரணத்தால் ஒரு சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும். இதற்கு
துத்தி இலையை இடித்துச்
சாறு
எடுத்து
, இதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
ஆண்களுக்கு உடல் வெப்பம் காரணமாக விந்து உற்பத்திக்
குறைபாடுகள் ஏற்படும்,

அவர்கள் துத்திப் பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, பசுவின் பால் சேர்த்து நன்றாகக் கொத்துக் காய்ச்சி வடிகட்டிய பின்பு அதனுடன் சர்க்கரை
கலந்து அருந்தி வர குணம் கிடைக்கும். இதன் மூலம்
உடல் வெப்பம் குறையும். தாது விருத்தியும், விந்து உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். துத்திக் கீரையை இடித்து அதன் சாறு இரண்டு
தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு
, ஒர் டம்ளர் மோர் சேர்த்து தினமும் காலை
வெறும் வயிற்றில்
உப்புச்
சேர்த்து அருந்தி வர மூலம் குணமாகும்.

துத்திக் கீரைக் கூட்டுடன், சாதத்துடன்
நெய் சேர்த்து
கலந்து
சாப்பிட்டு வர மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும்
, பெண்களுக்கு
உண்டாகும் வெள்ளைப்படுதலும் நீங்கும்.
துத்திக்
கீரையினை எவ்வகையிலேனும் உள்ளுக்குள் சாப்பிட
, உடலின்
பல்வேறு பாகங்களிலும் தோன்றித் தொல்லைத்
தருகிற எந்த நோய் எனினும் தீர்ந்து அமைதி, ஆரோக்கியம் உண்டாகும் என்பது அகத்தியர் குணபாடம் நூலில்
துத்தியின் பெருமையைச்
சிறப்பித்துக்
கூறுகிறது.

துத்திக் கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

துத்திக் கீரை – 200 கிராம்

சின்ன வெங்காயம் 100 கிராம்

வேக வைத்த துவரம் பருப்பு 3 தேக்கரண்டி

மிளகுத் தூள் அரை தேக்கரண்டி

சீரகம் ஒரு தேக்கரண்டி

நல்லெண்ணெய் மூன்று தேக்கரண்டி

செய்முறை

துத்திக் கீரை மற்றும் சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்
கொள்ளவும். பின்னர்
, வாணலியில் நல்லெண்ண்ய் ஊற்றி அதில் சீரகத்தைச் சேர்த்து கொள்ளவும்.
நறுக்கி வைத்திருக்கும் கீரை மற்றும் வெங்காயத்தை
வாணலியில் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு நீர் ஊற்றி
வேக வைக்கவும். நன்றாக
வெந்த
பின்னர் துவரை
, மிளகுத் தூள் போடவும். தேவையான அளவு உப்புச் சேர்த்து
அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ளவும். ஆரோக்கியமான
துத்திக் கீரைக் கூட்டு இப்போது தயார்.

துத்திப் பூச்சூரணம் நீக்கும் காசநோய்

துத்திப் பூவைச் சேகரித்து உலர்த்திப் பொடி செய்து
கொள்ளுங்கள். மேற்படி பொடி
5 அல்லது 10 கிராம்
எடுத்துக் கொண்டு பசுவின் பாலில் கற்கண்டு
சேர்த்துக் கலந்து சாப்பிட்டு வர இரத்த வாந்தி, உள் உறுப்புகளில் காணப்படும் உள் அழற்சி, குடல் புண் ஆகியன குணமாகும். உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். நுரையீரலில்
சேர்ந்த சளி
, மூச்சிரைப்பு ஆகியனவும் விரைவில்
குணமாகும். துத்திப்
பூவால்
இரத்த வாந்தி நிற்கும். காச நோய் நீங்கும். சுக்கில விருத்தியாகும். தேகம்
குளிர்ச்சி
பெறும் என்பதை அகத்தியர் குணபாடம்
கூறுகிறது.

பாதுகாப்பான மற்றும் விரைவில் கர்ப்பம்
உண்டாக வேண்டுமா
?

துத்தியின் வேர் முதல் இலை, பூக்கள்,
காய் வரை அனைத்தும் சுத்தம் செய்து நிழலில் உலர வைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி
பொடியுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குழைத்து
, தினசரி
ஒரு வேளை என்று திருமணமாவதற்கு
ஆறு
மாதங்களுக்கு முன்பு இருந்து உள்ளுக்குள் சாப்பிட்டு வர கர்ப்பம் தரிக்க
எளிதாகும்.

கனேரியா என்ற செக்ஸ் தொடர்பு கொண்ட பால்வினை நோய், தொழு நோய், குடல் புண், சிறுநீர்ப்பை
தொற்று நோய் போன்ற முக்கியமான நோய்களுக்கு
துத்தி சித்த வைத்தியத்தில் பெரும் பங்காற்றுகிறது. துத்தி
வகைகளில்
29 வகைகள் இருந்தாலும் பணியாரத் துத்தி
இந்தியன் மல்லோவ்
என்பதே
இந்திய நாட்டின் பூர்வீக புதர் செடியாகும். இதற்கு அதிபலா என்ற மற்றொரு பெயரும்
உண்டு.

 

 


Spread the love