ஒரு நொடியில் 40 இல் ஒரு பங்கு நேரத்தைத்தான் ஒருமுறை இமைப்பதற்கு கண்கள் எடுத்துக் கொள்கின்றன்.
சராசரி ஆயுளுள்ள மனிதன் தன் வாழ்நாளில் 250 மில்லியன் முறை தனது கண்களை இமைக்கிறான்.
கண்ணீருக்கு பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளைக் கொல்லும் கிருமிநாசினிக் குணம் உண்டு.
ஒரு மனிதனின் கண்ணீர் சுரப்பிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் அவனது கண்கள் வறண்டு போய் இறுதியில் அவன் குருடாகி விடுவான்.
கண்தானம் செய்யும் சிலர் நினைப்பது போல கண்களையே அகற்றி எடுக்க மாட்டார்கள். மாறாக கார்னியா எனப்படும் பார்வைப் படலத்தைத்தான் பிரித்தெடுத்துக் கொள்வார்கள்.
ஒருவர் இறந்த சில மணி நேரங்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.
மேலும் தெரிந்து கொள்ள…