பாலிப்ஸின் (பவழப்பூச்சியின்) உடற்கூறு

Spread the love

ஒரு குழாய் போன்ற அமைப்புடைய பாலிப்ஸ் ஒரு முனையில் கடல் அடியில் பூமியுடன் இணைந்திருக்கும். இல்லை பவழப் பாறைகளுடனும் இணைந்து இருக்கும். ஒட்டிக் கொள்ளாத இன்னொரு முனையில், ஒரு சிறிய வாய், வாயைச்சுற்றி பிடிக்க, நகர உதவும் “கொம்புகள்” (tentacles). இரண்டு அடுக்கு செல்களால் ஆன உடல். மேற்சொன்ன கொம்புகளின் நுனியில் விஷமுள்ள ஈட்டி போன்ற சலாகைள் (Spikev) அமைந்துள்ளன. இவை உலகில் முதலில் தோன்றிய எளிமையான, அடிப்படை பிராணிகளில் ஒன்றானதால் இவைகளுக்கு “மூளை” இல்லை! மாறாக மற்றும் நரம்புகளால் தனது சலாகைகளை உபயோகித்து, உணவை உட்கொள்ளும் ஆனால் பாலிப்ஸ் அதிகமாக இங்கும் அங்கும் நகராது.

ஆயிரக்கணக்கான, பாலிப்ஸ்கள், பார்க்கும் போது ஒரே ஒரு “தலையாக” கும்பலாக தெரிந்தாலும், ஒவ்வொரு “தலையும்” தனியான உயிர்கள். பாலிப்ஸ் சில மில்லிமீட்டர் அளவுகளே உள்ளவை.

பாலிப்ஸ்களின் உணவு

இவைகள் ஒரு செல் கடற்பாசியான “Zooxanthellae ” என்னும் உணவிலிருந்து, பெரும்பாலான சத்துக்களை பெறுகின்றன. இவற்றின் கொம்புகளால் (tentacles) ப்ளாங்டன் (Plankton) எனும் உணவையும் பாலிப்ஸால் பிடித்து உண்ணமுடியும். இவற்றின் உணவுகள் வளர சூரிய ஒளிபட வேண்டி இருப்பதால், பாலிப்ஸீகளும் சூரிய ஒளி படுமாறு, தெளிந்த ஆழமில்லா கடல் நீரில் (60 மீட்டர் ஆழத்திற்கு குறைந்து) இருக்கின்றன.

இனப்பெருக்கம்

பாலிப்ஸீக்கள் தங்கள் உடலுள்ளேயே இணைந்து இனப்பெருக்கம் செய்யலாம். இல்லை தானாகவே, உறவின்றியும் இனப்பெருக்கம் செய்யலாம். பாலிப்ஸீன் உடலிலேயே முட்டைகள் / விந்து உண்டாகின்றன. சில ரக பாலிப்ஸீகளில், அவற்றுக்குள்ளேயே முட்டைகள் விந்துடன் இணைந்து கருவாகின்றன. இந்த முறையை விட அதிகமாக நடைபெறும் இனப்பெருக்கம் – முட்டைகளும், விந்துவும் கடலில் விடப்படுகின்றன. கடல் நீரில் இவை இணைந்து கருவாகி, புழு வடிவ பூச்சிகளாக (Larvae) மாறுகின்றன. இவற்றை planulae என்கிறார்கள். இவை நகரும் தன்மையுடையவை. கடலடியில் சென்று, பாலிப்ஸாக மாறுகின்றன.

இவ்வாறு ஒன்றே இரண்டாக பிரிந்தும், ஒன்றின் மேல் ஒன்று ஒட்டிக்கொண்டும், ஆயிரக்கணக்கான விதவிதமான பாலிப்ஸீகள் உருவாகி கும்பலாக, கூட்டமாக, குடியிருப்புகளை உண்டாக்குகின்றன.

ஆஸ்திரேலியாவின் கடலில் மாபெரும் பவழப்பாறைகள் உருவாகி உள்ளன. Great Barrier reef எனப்படும் இந்த பவழப் பாறைகளில் நிகழ்ந்த இனப்பெருக்கத்தை (1982ல்) பார்க்க விஞ்ஞானிகளின் குழு ஒன்று இரவில் கடல் நீரில் அடியில். குழுமி, இந்த இனப்பெருக்க காட்சியை கண்டு மகிழ்ந்தது. ஆயிரக்கணக்கான பாலிப்ஸ் முட்டைகளும், பனிப்படலம் போல் விந்துக்களும், நீரில் வெளியாகி, காண்பவரை பரவசப்படுத்தின. கடலுக்கடியில் நடந்த ஒரு பனிப் புயல் போல் இந்த நிகழ்ச்சி நடந்தது.

பவழ ரகங்கள்

  1. மென்மையான பவழங்கள் கடல் விசிறி, கடல் சாட்டை எனப்படும் இந்த வகை பவழங்கள் முதுகெலும்பு இல்லாத பாலிப்ஸ் ஆகும்.
  • நீல பவழங்கள் உயிருடன் இருக்கையில் பழுப்புநிறமும், எலும்புகளாலும் முதுகெலும்பு நீல வண்ணமாகும் காணப்படும் சுண்ணாம்புக்கல் பழங்கள்.
  • கடினமான பவழங்கள் இவைகள் அதிகமாக காணப்படும் பவழப் பாறைகள். இவை சுண்ணாம்பு நிறைந்த முதுகெலும்பு உடையவை. இதில் 800 வகைகள் உள்ளன. பல வடிவங்களில் இருக்கும். வருடத்தில் ஒரு சில மில்லி மீட்டர்கள் தான் வளர்ந்தாலும், பல நூற்றாண்டுகள் வாழ்வதால், பல மீட்டர்கள் அளவு வளர்ந்து விடும். கிளைகளுடைய பவழங்கள் துரிதமாக, 6 செ.மீ. (வருடத்தில்) வளரும்.
  • கரும் பவழங்கள் இவற்றில் 200 வகைகள் உள்ளன. இவற்றின் முதுகெலும்புகள் புரதத்தால் உருவானவை. இவற்றுக்கு சூரிய வெளிச்சம் தேவைப்பட்டதால், 30 மீட்டர் ஆழத்திற்கு மேல் இருக்கும். இதன் கூடுகள் (எலும்பு) ஆபரணங்களுக்காக சேகரிக்கப்படுகின்றன. இவை மெதுவாக வளர்வதால், கிடைப்பது கடினம்.
  • சிவப்பு பவழம் இவை ‘நெருப்பு’ பவழங்கள் (Feir corals) எனப்படுகின்றன. இவை சுண்ணாம்பு நிறைந்த முதுகெலும்புடன் பலவித வடிவங்களில், செடிகிளைகள் போல் படர்ந்து, பெரியதாக காணப்படும்.

பவழப் பாறைகளின் இருப்பிடம்

பவழங்கள் நல்ல நீரில் உருவாகாது. கடல்களில் மட்டுமே கிடைக்கும். உலகின் எல்லா கடல்களிலும் குறிப்பாக உஷ்ண பிரதேச கடல்களில், பரவியிருக்கும். பல ரகங்கள் குறைந்த ஆழத்தில் சூரிய ஒளி ஊடுருவும் ஆழத்தில் இருக்கும். சில ரகங்கள் குளிர் பிரதேச கடல்களிலும், அதிக ஆழத்திலும் இருக்கும். அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் 600 ரகங்களும், பசிபிக் மகா சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 700 ரகங்களும் காணப்படுகின்றன. பவழங்கள் வளர தேவையானது கெட்டியான, பாறை போன்ற கடல் அடி பூமி. நகரும் மண்ணோ, மணலோ இருந்தால் பவழங்கள் வளராது. அதிக ரகங்களுக்கு சூரிய ஒளி ஊடுருவும் தெளிந்த நீர் தேவை. கடல் நீர் குளிர்ந்து இல்லாமல் சிறிது வெப்பமாக இருந்தால் பவழங்களுக்கு நல்லது. 18 டிகிரி செ (64 டிகிரி எஃப்) க்கு குறைந்த நீர் வெப்பத்தில் பவழங்கள் வளராது.

பவழப் பாறைகள்

பவழப்பூச்சிகள் (polyps) இறந்தாலும், சுண்ணாம்புகல்லான எலும்புக்கூடுகள் நீடித்திருக்கும். மலைபோல் குவியும் எலும்புக்கூடுகள் சமுத்திரத்தின் அடிமட்ட தோற்றத்தையே மாற்றிவிடும். நூற்றாண்டு நூற்றாண்டுகளாக பழைய எலும்புகளின் மேல் புதிதாக பவழப்பாறைகள் உருவாகிக் கொண்டே வரும். புயல் போன்ற தாக்குதல்களால் உடைந்து கிடக்கும் பவழப் பாறைகளின் குவியல், இதர பாறைகளின் நடுவில் குவிந்து விடும். இவைகள் நாளடைவில் கெட்டியாகி, தீவுகளிலிருந்தும், கடற்கரை ஓரங்களிலிருந்தும் சிறிது தூரத்தில் அமைந்திருக்கும். இந்த கடினமான அணை போன்ற அமைப்பினால் சமுத்திர அலைகள் தடைபடும். எனவே கடற்கரையிலிருந்து பவழப் பாறைகள் வரை உள்ள கடல், அலைகள் இன்றி அமைதியான ஏரிபோல் (Lagoon) இருக்கும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் பவழப் பாறைகளில் புகலிடம் தேடி, வசிக்கின்றன.

பவழத்தின் பயன்கள்

பவழப் பாறைகள் கரைக்கும் கடலுக்கும் நடுவே அமைந்து, அரண் போல் தடுப்புச் சுவராக இருப்பதால், பல தீவுகள் புயல், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களை சமாளிக்கின்றன.

பவழப் பாறைகளின் நடுவிலும், அவைகளால் ஏற்பட்ட “ஏரி” (Lagoon) யிலும் எண்ணற்ற கடல் உயிரினங்கள், மீன்கள் வசிக்கின்றன. தொன்று தொட்டு, இந்த உயிரினங்கள் மனிதர்களுக்கு உணவாக உதவியுள்ளன.

சிவப்பு பவழங்கள் நகைகளாக, ஆபரணங்களாக பயன்படுகின்றன. வேத கால ஜோதிட கலையின் படி, செம்பவழம், செவ்வாய் கிரகத்தை குறிக்கிறது. ஆனால் அசல் செம்பவழம் (நெருப்புப்பவழம்) கிடைப்பது கடினம்.

பழங்காலங்களில், பவழப் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வீடுகள் கட்ட உபயோகிக்கப்பட்டன.

புவிவியில் விஞ்ஞானிகளுக்கு பூமியில் பாறைகள் எப்போது தோன்றின என்ற புவியியல் கால கட்டங்களை அறிவது அவசியம். இதற்கு பவழப் பாறைகள் உதவுகின்றன. சில பவழங்களில் உள்ள கோடுகள் / பட்டைகள் ஒரு வருடத்திற்கு ஒன்றாக உருவாகும். அவற்றில் மேல் உள்ள கோடுகளின் மூலம் அவற்றின் வயதை தெரிந்து கொள்ளலாம்.

ஆயுர்வேதமும் பவழமும்

சில ரத்னங்களுக்கு உடல் கோளாறுகளை குணப்படுத்தும் சக்தி உள்ளது. என்றும் அவற்றில் பவழமும் ஒன்று என்று ஆயுர்வேதம் கருதுகிறது. பவழம் ரத்தத்தை சுத்திகரிக்கும். அம்மை, தட்டம்மை, உயர்ரத்த அழுத்தம், சோகை, மூட்டு வியாதிகள் இவற்றை குணமாக்கும்.

பவழத்தில் பிராணி, அங்கக (organic) பொருள் 8% சுண்ணாம்பு (கார்பனேட்) 83% மெக்னீசியம் கார்பனேட் 3.5% அயச்சத்து (Ferric oxide) 4.5% உள்ளன.about coralபவழத்தில் பிராணி, அங்கக (organic) பொருள் 8% சுண்ணாம்பு (கார்பனேட்) 83% மெக்னீசியம் கார்பனேட் 3.5% அயச்சத்து (Ferric oxide) 4.5% உள்ளன.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவை மூன்றின் கஷாயத்தில் பவழத்தை கொதிக்க விட்டால், சுத்தமாகிவிடும். பிறகு உலோகங்களை உருக்கும் மண்பாத்திரத்தில் போட்டு மூடி, எரித்து பஸ்பமாக்கப்படும். இன்னொரு முறையில், எலுமிச்சை சாற்றி ஊறவைத்து, பின் பஸ்பமாக தயாரிக்கப்படும். வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதை கட்டுப்படுத்த, நரம்புதளர்ச்சிக்கு மருந்தாக, சுலபமாக சிறுநீர் பிரிய, மலமிளக்கியாக, பவழபஸ்மம் உபயோகப்படுகிறது. பற்பொடி தயாரிப்பில் உபயோகமாகிறது. ஆஸ்துமா, இருமல் சிறுநீர் நோய்கள், பாலியல் நோய்கள் இவற்றும் பவழம் மருந்தாக உபயோகமாகிறது.

பவழப் பாறைகள் நிறைந்த தீவுகளை தேடி, பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். கடலடியில் சென்று, பவழப் பாறைகளின் அழகை காண்பது கண் கொள்ளாக்காட்சியாகும். பல திரைப்படங்களில், பவழப் பாறைகளின் அழகு காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுற்றுப்

புற சூழ்நிலை வெகுவாக பவழங்களை பாதிக்கும். விஞ்ஞானிகள், இப்போது உள்ள பவழப் பாறைகளின் 50 சதவிகிதம், 2030 வருடத்திற்குள் அழிந்து விடும் என்று கருதுகின்றனர். அரபிக் கடலில் உள்ள இந்தியாவின் லட்சத் தீவுகளில் பவழப் பாறைகளை காணலாம்.


Spread the love