ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்று படித்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அவைகள் யாவை என்பது பலருக்கு தெரியாது இந்த கலைகள் என்ன என்பது வத்ஸ்யாயனாவின் பிரசித்தி பெற்ற “காம சூத்ரா” வில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவை என்னவென்று பார்ப்போம்.
1. வாய்ப்பாட்டு
2. இசைக்கருவிகளை பயன்படுத்தல்
3. நாட்டியம்
4. சித்திரம் வரைதல், வண்ணம் தீட்டுதல், ஒவியக் கலை
5. பூர்ஜா (Betula utilise), மரம் மற்றும் வேறு மரங்களின் பட்டையிலிருந்து விதவிதமான திலகங்கள், பொட்டுகள் தயாரிப்பது
6. ரங்கோலி இடும் கலை
7. படுக்கை, ஒய்வு அறைகள் இவற்றை மலர்களால் அலங்கரிப்பது
8. உதடுகள், உடல்களில் வண்ணம் சூட்டிக்கொள்ளுதல்
9. தரையை மரகதம், ரத்தினங்களால் அலங்கரிப்பது
10. படுக்கையை மனோ நிலைக்கு ஏற்ப தயார் செய்வது
11. ஜலதரங்கம் போன்ற நீர் சம்பந்தப்பட்ட இசைக்கருவிகளை இயக்குவது
12. தண்ணீர் நிரப்பப்பட்ட பீச்சாங்குழல் வைத்து விளையாடுவது
13. விரோதிகளை வெற்றிக் கொள்ள மந்திர தந்திரங்களும், மூலிகைகளும் தெரிந்திருப்பது
14. அழகான மலர் மாலைகளை தயாரிக்கும் கலை
15. தலைக்கு அலங்காரம் செய்ய மணிமாலைகளை செய்யும் கலை
16. இடம், சமயம் சூழ்நிலைக்கேற்ப ஆடை அலங்காரம் செய்து கொள்வது
17. சங்கு, தங்கம் இவற்றால் காதணிகள் தயார் செய்வது
18. வாசனைப் பொருட்கள் தயார் செய்வது
19. தங்க மாலைகளில் ரத்தினங்களை பதிப்பது, காதணிகள், கை வளையல்கள் உருவாக்குவது
20. மந்திர கலை
21. அழகையும், கவர்ச்சியையும் அதிகமாக்கும் முறைகளை தெரிந்திருத்தல்
22. விரைவான செயல்பாடு, மற்றவர்களின் பொருள்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து ஒளித்து வைப்பது
23. சமையல் கலை – புதுப்புது பதார்த்தங்களை தயாரிப்பது
24. குளிர்ந்த பானங்கள், சர்பத்துக்கள் தயார் செய்வது
25. நெய்தல், துணி தைப்பது, கைவினைப்பொருள்கள் செய்வது
26. கயிறுகளை வைத்து கொண்டு மந்திர ஜாலங்கள் செய்வது
27. வீணை மற்றும் தமரு வாசிப்பது
28. விடுகதைகளுக்கு விடை சொல்லும் திறன், புதிதாக விடுகதைகள் கட்டும் அறிவு
29. அந்தாக்சரி – கும்பலில் ஒவ்வொருவராக பாடி, ஒருவர் முடிக்கும் கடைசி வார்த்தையில் மற்றவர் புதிய பாடலை தொடங்குவது
30. கடினமான பாடல்களை மனப்பாடம் செய்வது, புதிய சிக்கலான பாடல்களை உருவாக்குவது
31. மகாபாரதம் போன்ற நூல்களில் இருந்து ஸ்லோகங்களை சரிவர எடுத்து தேவைக்கு ஏற்ப பாடுவது அல்லது உரக்கப் படிப்பது
32. நாடகங்கள், உரைநடை இவற்றில் புலமை பெற்றிருத்தல்
33. முடிவு பெறாத செய்யுள்களை முடிக்கும் திறன்
34. மூங்கிலிருந்து நாற்காலி, கட்டில் போன்றவற்றை தயார் செய்வது
35. மரச் சிற்பங்கள் செய்யும் திறன்
36. தச்சு வேலை அறிந்திருத்தல்
37. கட்டிட நிர்மானம், கட்டிடங்களை கட்டும் தொழில் நுட்பம்
38. வைரங்கள், ரத்தினங்கள், தங்கம் இவற்றைப் பற்றி அறிந்திருத்தல்
39. உலோக கலை, பூவிஞ்ஞானம் தெரிந்திருத்தல்
40. சுரங்கக் கலை
41. தாவரவியல், தோட்டம் போடுதல், செடிகளின் பராமரிப்பு, செடிகளுக்கு நோய் வராமல் தடுப்பது – இவற்றைப் பற்றிய அறிவு
42. ஆட்டுக்கடா, கோழிகள் இவற்றை சண்டையில் பழக்குவது
43. கிளிகள், மைனாக்கள் இவற்றுக்கு பேச கற்றுக்கொடுப்பது
44. கைகளாலும், கால்களாலும் மற்றவருக்கு மசாஜ் செய்வது
45. சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள நினைவு குறிப்புகளை தெரிந்து வைத்திருத்தல், மறைமுக அர்த்தமுள்ள செய்யுள்களை இயற்றும் திறன்
46. குழப்பமான மொழியில் மறைக்கப்பட்டிருக்கும் அர்த்த புஷ்டியுள்ள விதத்தில் எழுதுவது
47. பல மொழிகளை தெரிந்துதிருத்தல்
48. வண்டிகள், தேர்கள் இவற்றை மலர்களால் அலங்காரம் செய்வது
49. சகுனங்களைப் பற்றிய அறிவு
50. யுத்தத்திற்கு தேவையான உபகரணங்கள், இயந்திரங்களை தயார் செய்வது
51. படித்ததை நினைவு வைத்துக் கொள்ளும் அறிவு
52. பாடம் படித்தல் – ஒருவர் படிக்கும் பொழுது அவருடன் சேர்ந்து பாடம் படிப்பது
53. ஒருவர் ஒரு செய்யுளை கட்டுவார் இதன் அர்த்தத்தை சொல்லமாட்டார் ஆனால் சில குறிப்புகளை தருவார் இந்த குறிப்புகளை வைத்துக் கொண்டு மற்றவர் அந்த செய்யுளை கண்டுபிடிப்பார் இந்த ஆற்றலும் ஆய கலைகளில் ஒன்று.
54. அகராதி, நிகண்டு இவற்றைப் படித்து நிபுணராவது
55. யாப்பிலக்கணம் தெரிந்திருத்தல்
56. கவிதை திறமை
57. மற்றவரை குழப்ப மாறுவேடம் அணிவது
58. மற்றவர் பார்க்காத வண்ணம் துணிகளால் பொருளை மறைத்து வைப்பது
59. சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை தெரிந்து வைத்திருத்தல்
60. பகடைகளை உருட்டும் திறமை பெற்றிருத்தல்
61. குழந்தைகளை பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளால் மகிழ்விக்கும் திறன்.
62. யானைகளையும், குதிரைகளையும் பழக்கும் திறமை
63. வெற்றி பெற ஆன்மீகம் மற்றும் லௌகீக முறைகளை கையாளுவது
64. வேட்டையாடுவது போன்ற உடற்பயிற்சிகளை தெரிந்திருத்தல்.