ஸ்ட்ரெஸ் குறைய என்ன செய்ய..?
கேள்வி: எனது வயது 35 தான் ஆகிறது. தனியார் கம்பெனியில் வேலை என்பதால் பல மணி நேரங்கள் பணி புரிய வேண்டியிருக்கிறது. அலுவலக வேலை மற்றும் சில காரணங்களால் எப்போதும் டென்ஷனாக உள்ளேன். மன அழுத்த நோயாகி விடுமோ என்று பயப்படுகிறேன். ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் பாதிப்பில் இருந்து விடுபட என்ன செய்யலாம்? என்று தெளிவுபடுத்தினீர்கள் என்றால் உதவியாக இருக்கும்.
பதில்: மன அழுத்தம் குறைய மிகவும் எளிமையான வழி உடற்பயிற்சி தான். நாள் தவறாது நாம் செய்யும் உடற்பயிற்சிகள் அதிசயத்தக்க ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது. உடல் வலிகளை மட்டும் இது குணப்படுத்துவதில்லை. எதிர்மறை எண்ணங்களைக் குறைக்க உதவுகிறது. மனதை ஒரு நிலைப்படுத்துவதால், சக்தி மிக்க நேர்மறை விளைவுகள் மனதில் அதிகரிக்கிறது. நமது உடல் இயக்கம் நன்றாக வேலை செய்ய, மூளைக்குத் தேவையான ஒன்று ஊட்டச் சத்துகள் ஆகும். மூளையின் செயல் திறனுக்குத் தேவையான சத்துகள் என்ன என்று கேட்டால் ஒரு பட்டியல் இடலாம். ஒமேகா 3, அமினோ அமிலங்கள், வைட்டமின் டி, வைட்டமின் பி, துத்த நாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற தாது உப்புகளும் ஆகும். மேற்கூறிய சத்துக்கள் தான் வலிமையான மனநல ஆரோக்கியத்தைத் உருவாக்குகின்றன. மத்திய தரைக்கடல் நாடுகள் உணவாகப் பயன்படுத்தும் ஆலிவ் எண்ணெய், பசுமையான இலைகள் கொண்ட கீரை வகை, காய்கறிகளில் மேலே கூறப்பட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேற்கூறிய மத்திய தரைக்கடல் நாடுகள் பயன்படுத்தும் உணவுக் கட்டுப்பாடு முறைகளை கடை பிடித்தவர்களில், 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உணவாக உட்கொண்ட சுமார் 10,000 நபர்களை ஆராய்ந்த பொழுது, அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மனநல ஆரோக்கியத்திற்கும், உணவுக் கட்டுப்பாட்டிற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த ஒரு ஊட்டச் சத்து நிபுணர் ஒருவர் கூறும் பொழுது, மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு காலை உணவாக இரவு ஊற வைத்த முளை விட்ட தான்யங்களை வறுத்து, அதனுடன் நசிக்கப்பட்ட அவகேடா மற்றும் முட்டையை சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கிறார். முட்டையில் ஒமேகா 3, வைட்டமின் டி மற்றும் கொழுப்பு அமிலம் உள்ளது. இதில் முட்டையில் உள்ள கொழுப்பு அமிலம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. 60 சதவிகித அளவை கொழுப்பாகக் கொண்ட நமது மூளைக்கு நாம் உண்ணும் உணவிலிருந்து கொழுப்புச் சத்து பெற வேண்டிய அவசியம் உள்ளது. அவகேடாவில் டிரிப்டோபன், போலட் அமிலம் மற்றும் ஒமேகா 3 உள்ளது. அமினோ அமிலங்கள் மூளையில் நியூரோட்ரான்ஸ்மிட்டரை மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய தேவையான ஒன்றாகும். இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதால் நல்ல மனநிலையை நாம் பராமரிக்க இயலும் என்பதும் புரிந்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் ஏற்படும் இரத்தச் சர்க்கரை அளவு குறைவதால் ஏற்படும் எரிச்சல் உணர்வு மறைய, மூன்று வேளைகள் உணவு மட்டுமல்லாது மதியம் இரவு உணவுக்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் நொறுக்குத் தீனியும் சாப்பிடுவது நல்லது.
இதற்கு கீரை வகைகள், சிவப்பு மாமிசம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஸ்பினாச் போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கின்றார். இரவு நேரம் தவறிய வேளை சாப்பிடும் உணவு உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்றாலும் இரவுத் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் ஓட்ஸ் உணவுடன் சிறிதளவு தேனும் சேர்த்துக் கொள்ளவும். இரத்தச் சர்க்கரை அளவு குறைவதால் இரவின் மத்தியில், நீங்கள் படுக்கையை விட்டு எழுந்து விடுவீர்கள் என்பதால், படுக்கைக்குச் செல்லும் முன்பு ஸ்நாக்ஸ் வகை உணவுகளை உட்கொள்வதால் இரவு முழுவதும் நன்றாக தூங்க உதவி செய்கிறது.
அவகேடா, ஓட்ஸ் உணவுகளை தனித்தனியாகச் சாப்பிடுவதால் மன அழுத்தம் குணமாவதில்லையெனினும், இரண்டையும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வரும் பொழுது, மன நிலை ஆரோக்கியம் பெறும் சரியான ஒரு அமைப்பு ஏற்படுகிறது. ஊட்டச்சத்துக்களில் இருந்து நமது மூளை உறுப்புகளுக்கு எரிசக்தியாக தேவைப்படும் ஒரு விஷயமாகும். அதனை நாம் உண்ணும் உணவில் இருந்து பெறவில்லையெனில், நமது நரம்பு சார்ந்த நியூரோ ட்ரான்ஸ்மிட்டர், ஹார்மோன்களை உற்பத்தி செய்ய இயலாது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக் கூடிய நாம் உண்ணுகிற உணவு மனநிலை ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை வழங்க இயலும்.