6 ஆண்டு ஆரம்பம்

Spread the love

“ஆயிரந் தெய்வங்களுண்டென்று தேடி

 அலையுமறிவிலிகாள் – பல்

 லாயிரம் வேதமறிவென்றே தெய்வமுண்

 டாமெனில் கேளீரோ?” – என்றார் பாரதியார்

உலகில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும் தான் எது நல்லது, எது கெட்டது என்று பகுத்தறியும் அறிவுத்திறன் உள்ளது. இது நமக்கு இறைவன் கொடுத்த வரம். இந்த அறிவை நாம் நல்ல வழியில் செலுத்த வேண்டும்.

அறிவை வளர்ப்பது கல்வி. எனவே எப்பாடுபட்டாவது கல்வியை பெற வேண்டும். கல்வியால் பெறும் அறிவினால் மனிதன் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெற்ற அறிவை பயன்படுத்தாவிடில், மனது கீழான எண்ணங்களால் அலைபாயும். மனதை அடக்க அறிவை உபயோகிக்க வேண்டும். அறிவினால் செல்வமும், செழிப்பும் உண்டாகும்.

ஒருவர் தான் செய்யும் வேலை, எந்த வேலையானாலும் சரி, அதில் ஆர்வம் காட்டி அதை செவ்வனே செய்ய அறிவு பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். அதற்கு அறிவுடன் கூடிய உழைப்பு தேவை.

மனித வாழ்வின் சரித்திர முன்னேற்றங்கள் அறிவு பூர்வமான கண்டுபிடிப்புகளால் ஏற்பட்டவை. “அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்” என்கிறது வெற்றி வேற்கை.

உணவு நலம் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றது. தற்பொழுது 6ஆம் ஆண்டில் உணவு நலம் அடி எடுத்து வைக்கின்றது. எங்களால் முடிந்த வரை பயனுள்ள பல தகவல்களை திரட்டி ஆலோசகர்களுக்கு வழங்கி வருகின்றோம். அவற்றை வாசசர்களும் சிறப்பாக ஏற்றுக் கொள்கின்றனர்.

உணவு நலம் செய்யும் இத்தொண்டு வெற்றி பெற வேண்டுமானால் எம் வாசகர்கள் நாம் வழங்கி வரும் தகவல்களை அறிந்து அவற்றை நடைமுறையில் பயன்படுத்தும் பொழுது தான் எமது பணி சிறக்கும் நாம் முழு வெற்றி பெறுவோம். வரும் காலங்களில் எம் வாசகர்கள் முழுப் பயன் பெறும் விதத்தில் இப்பயனுள்ள தகவல்களை தாமும் நடைமுறைப்படுத்தி தம் குடும்பத்தினரையும் ந்பர்களையும் நடைமுறைப்படுத்த வைப்பார்கள் எனவும் அதன் மூலம் முழு ஆரோக்கியம் பெறுவார்கள் என்பதும் திண்ணம்.

தங்கள் நலன் கருதி

ஆயுர்வேதம் Dr. S. செந்தில்குமார்


Spread the love
error: Content is protected !!