மனிதன் உயிர் வாழ உணவு தேவை என்பது மட்டுமல்ல, அந்த உணவுகளில் நமது உடலை நோயின்றி பாதுகாத்து, வலுவும் ஆரோக்கியமும் தர பல சத்துகள் அடங்கியிருக்க வேண்டும்.நாம் சந்தையில் பல விதமான காய்கறிகளை பார்த்தாலும், ஒரு சில காய்கறிகளில் நமக்கு தேவையான சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளன. வாரம் ஒரு முறை நாம் இவ்வகை காய்கறிகளை மாற்றி மாற்றி உணவில் தினசரி சேர்த்துக் கொண்டு வந்தால் நம்மை சாதாரண காய்ச்சல் முதல் பெரிய நோய்களாக கருதப்படும் நீரிழிவு, இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவைகளில் இருந்து விடுவித்துக் கொள்ளலாம்.
கத்தரிக்காய்
110 கலோரி சத்து அளவு உள்ளது.மெக்னீசீயம், பொட்டாசியம், நார்ச் சத்து, வைட்டமின்கள் சி, கே, மற்றும் பி6 உள்ளது.வறுத்து சாப்பிடலாம்.பொரித்தும் சாப்பிடலாம்.சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
மூளை செல்களை பாதுகாக்கிறது. போட்டோ நியூட்ரியன்ட்ஸ் சத்து இருப்பதால் நினைவாற்றலை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் கொழுப்பைக் கரைக்கும். இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மன அமைதியைத் தரும். ஆரம்பக் கட்ட சிறு நீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது. இதில் உள்ள நீர் சத்து சருமத்தை மென்மையாக்கும்.
டைப் 2 வகை நீரிழிவு நோயை வர விடாமல் தடுக்கும். புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கும்.உடலில் சேர்ந்த அதிகப் படியான இரும்புச் சத்தை சமன்படுத்தும்.
பாகற்காய்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதால் நீரிழிவு நோயுள்ளவர்க்கு அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நீரிழிவு ஏற்படுவதை தடுக்கிறது.
1. சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யும்.
2 மூப்படைதலை தாமதப்படுத்தும்.
சரும நோய்களை குணப்படுத்தும்.
கொழுப்பு படிய விடாமல் தடுக்கிறது.ஹார்ட் அட்டாக்கைத் தடுக்கிறது.உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.கல்லீரலைப் பலப்படுத்துகிறது.புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.
பச்சை பட்டாணி
ஒரு கப் பச்சைப் பட்டாணியில் 44 சதவீதம் வைட்டமின்கள் உள்ளது.வைட்டமின்கள் பி அதிகம் உள்ளது.இந்த வைட்டமின்கள் ஓஸ்டியோ போராசிஸ் என்ற எலும்பு மூட்டு நோய் வராமல் தடுக்க உதவுகிறது.உடலில் எலும்புகளில் கால்சியம் நிலைப்படுத்த உதவுகிறது.இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமன் செய்யும்.சருமச் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.கவுமெஸ்ட்ரோப் என்னும் பைட்டோ சத்தானது வயிற்றில் புற்று நோய் தோன்றும் வாய்ப்பைக் குறைக்கிறது.வராமல் தடுக்கவும் உதவுகிறது.சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது.மறதி நோய் ஏற்படாது.புரதம், நார் சத்து, கால்சியம், நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளன.இதயத்தைப் பாதுகாக்கிறது.
காலிஃபிளவர்
இதில் வைட்டமின்கள் கே, வைட்டமின்கள் பி6, புரதம், தயாமின், ஃபோலேட், பாந்தோதெனிக் அமிலம், பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளன.தினசரி பயன்படுத்தப்பட வேண்டிய வைட்டமின் சி சத்தின் 77 சதவீதம் இதனை சாப்பிட பெற்று விடலாம்.இதில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் செல் தேய்மானம், இதய ரத்த நாளக் குழாய் நோய்கள், புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. நாம் கவனிக்காமல் போவதால் புற்று நோய்கள் தோன்றுவதற்கு காரணியாக இருக்கும் விஷப் பொருட்களை சமனிலைப்படுத்தும் ஈரலின் வேலையை நன்கு இயங்கச் செய்யும் விஷப் பொருட்களையும் நீக்குகிறது. சிறு நீரகப் புற்று நோய், மார்பக புற்று நோய், கர்ப்பப்பை புற்று நோய், பிராஸ்டேட் சுரப்பி புற்று நோய் போன்ற அனைத்து வகை புற்று நோய்களும் உடலின் பல்வேறு இயக்கங்களில் உருவாகக் காரணமாக இருக்கும் சூழலை தடுக்கிறது. நார்ச் சத்துக்கள் இருப்பதன் காரணமாக செரிமான இயக்கம் நன்கு வேலை செய்வதுடன் வயிற்றுப் புண், குடல் புண் வருவதைத் தடுக்கிறது.மூட்டு வலி, அலர்ஜி, நீரிழிவு இவற்றை குணப்படுத்துகிறது.
காளான்
இயற்கையாகவே கிடைக்கும் காய்கறிகளில் புத்தம் புதிய காளானில் மட்டும் தான் வைட்டமின் டி சத்து உள்ளது.சூரியனின் புற ஊதாக் கதிர்கள் காளான்களில் படும் பொழுது வைட்டமின் டியை அதிகரிக்கத் தூண்டுகிறது என்று ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகள் கூறுகின்றன.காளானில் உள்ள தாமிரச் சத்தானது உடல் முழுவதும் கொண்டு செல்லும் இரத்த சிகப்பு செல்களை உருவாக்க உதவுகிறது. தாமிரச் சத்தானது உடலில் எலும்புகளையும், நரம்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, நமது அன்றாடத் தேவையான பொட்டாசியம் சத்தின் அளவில் 9 சதவீதம் காளானில் மட்டும் உள்ளது. பொட்டாசியம் சத்தானது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.நரம்புகளையும், தசைகளையும் உருவாக்கப் பயன்படுகிறது.இதில் உள்ள பான்தோதெனிக் அமிலமானது ஹார்மோன்கள் உற்பத்தியைத் தூண்டுவதுடன் நரம்பு மண்டல இயக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது.எர்கோத்திநெயின் என்னும் இயற்கையிலேயே கிடைக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் உடல் செல்கள் அழியாத வண்ணம் பாதுகாக்கிறது.
அது போல செலீனியம் என்னும் தாது பொருளும் ஆன்டி ஆக்சிடன்டாக அமைந்து செல் அரிப்பு, தேய்மானத்தைத் தடுத்து இதய நோய்கள் தோன்றுவதையும் தடுக்கிறது.ஆண்களின் வீரிய சக்திக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் முக்கிய தேவையாக செலீனியம் பயன்படுகிறது.
சீன முட்டைக் கோஸ்
வெள்ளைத் தண்டுகளுடன் அடர்த்தியான கரும்பச்சை நிறத்தில் காணப்படும் போக் சோய் என்று கூறப்படும் சீன முட்டைக் கோஸ் ( அனைத்து இந்திய மொழிகளிலும் சீன முட்டைக் கோஸ் (சைனீஸ் கப்பேஜ்) என்று தான் அழைக்கப்படுகிறது) கொழுப்பு சுத்தமாக இல்லாதது, மொத்தத்தில் 9 கலோரி அளவே ஒரு கோப்பை சீன முட்டைக் கோசில் உள்ளது என்றால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். மேலும் இதில் புரதம், நார் சத்து, உடலுக்கு அவசியமான அனைத்து வைட்டமின்கள், தாதுச் சத்துக்கள் காணப்படுகின்றன.இதில் குறிப்பிட்ட அளவு காணப்படும்.பீட்டா கரோட்டீன், நுரையீரல், கல்லீரல் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.அது மட்டுமல்லாமல் காட்ராக்டை தடுக்கிறது.