நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள்?

Spread the love

நீங்கள் தினமும் படுக்கையில் எப்படி படுப்பீர்கள்? நீங்கள் நன்றாக தூங்கும்போது, பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தான் தலையை, கால்களை நீட்டியபடி படுப்பீர்கள். அதை வைத்து,மனோ ரீதியாக உங்கள் குணத்தை சொல்ல முடியும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதோ சில போஸ்களும் அதற்கேற்ற குணங்களும்.

பக்கவாட்டில் சுருங்கி படுப்பது

வெளியில் பார்ப்பதற்கு தோற்றத்தில் கடுமையாக இருப்பார். ஆனால் இதயத்தில் மென்மையானவர். ஆண்களைவிட, பெண்கள்தான் அதிகம் பேர் இந்த போசில் தூங்குவர்.

லேசாக தலை சாய்த்து

இந்த பாணியில் தூங்குவோர், எதையும் ரொம்ப ஈசியாக எடுத்துக் கொள்வர், டென்ஷன் ஆக மாட்டார்கள். நாலுபேர் நடுவில் இவர் இருப்பார். தனிமை பிடிக்காது. புதியவர்களாக இருந்தாலும் பழகி விடுவார். ஏமாளியாகவும் இருப்பார்.

தலையணையை பிடித்தபடி

பக்கவாட்டில் தலையணையை ஒரு கையால் பிடித்தபடி தூங்குவோர், திறந்த மனதுடையவராக காட்சி தருவார். ஆனால், சந்தேகத்துக்கு உட்பட்டவராகத் தான் நடப்பார். ஒரு விஷயத்தில் முடிவெடுக்க தயக்கம் அதிகம். எடுத்துவிட்டால் மாற்றிக் கொள்வது அரிது.

நேராக படுத்தால்

மிகவும் அமைதியானவர், அதிகம் பேசமாட்டார். உயர்ந்த லட்சியம் கொண்டிருப்பர்.

குப்புறப்படுத்தால்

எப்போதும் டென்ஷன்தான். எதற்கெடுத்தாலும் சுரீர் என்று கோபம் வந்துவிடும். பரபரப்புக்கு குறைவே இருக்காது. விமர்சனத்தை தாங்க மாட்டார். அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க விரும்பாதவர்.

கைகளை பரப்பி நேராக கைகளை பக்கவாட்டில் தலைக்கு மேல் பரப்பியபடி தூங்குவோர், யாரையும் நண்பராக பாவிப்பார், மற்றவர்கள் கருத்தை மதிப்பர், பப்ளிசிட்டியை விரும்பாதவர்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love