மனக்கவலை என்பது இன்று நேற்று ஆரம்பமானது அல்ல பல காலமாக அதைப் பற்றியே சிந்தித்து உருவானது. எனவே, கவலைகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துங்கள்.
கவலைகள் சுவாசத்தையும், செயல் திறனையும் குறைக்கும். எனவே கவலைகளை மறந்து சுதந்திரமாக ஆழமாக சுவாசியுங்கள் உங்கள் செயல் திறன் அதிகரிப்பதை உணருங்கள்.
கவலைகளில் 40 சதவீதம் நடந்ததைப் பற்றியும் 50 சதவிகிதம் நடக்கப் போவதைப் பற்றியும் 10 சதவிகிதம் நடந்து கொண்டிருப்பதைப் பற்றியே உள்ளன எனவும், இவற்றில் 90 சதவிகிதம் நடக்காத நடக்க முடியாத தேவையற்ற சிந்தனைகளே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனக்கவலையைப் குறைப்பதற்கு ஒர் எளிய வழி நடந்து முடிந்த செய்துவிட்ட தவறுகளைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது தவறுகளை அந்த நிமிடமே மறப்போம் என உறுதி கொள்வது.
திறமை வாய்ந்தவர்கள் செய்துவிட்ட கவலை தரக்கூடிய செயல்களை கண்டும் காணாதது போல இருந்து விடுவர் (look Over) இவை மனக்கவலைகளை பெரிதும் குறைத்திடும்.
கடந்த காலத்தைப் பற்றியே சிந்திக்காமல் எதிர் காலத்தில் நம்பிக்கை உடையவராகவும் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற சிந்தனையுடனும் இருத்தல் அவசியம்.
கடவுள் என்னை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்துள்ளார் என நம்ப வேண்டும், சிந்திக்க வேண்டும். அமைதியாகவும் சந்தோஷமாகவும் அனைத்து கவலைகளையும் மறந்து இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
குப்பைகளை தூக்கி வீசுவது போல உங்கள் மனக்கவலைகளை உங்கள் மனதை விட்டு தூக்கி எறிந்து விட்டு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
தேவையற்ற சிந்தனைகளை தூக்கி எறிந்து விட்டு நல்ல முற்போக்கான களை வளர்த்தும் கொள்ளுங்கள். நற்சிந்தனையாக மனதை நிரப்பிக் கொள்ளுங்கள்.
கடவுள் உங்களுடன் ஒவ்வொரு நிமிடமும் காலையும் இரவும் இருப்பதாக உணருங்கள் அந்த சிந்தனை உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் பிரகாசமானதாகவும் ஆக்கிடும்.