கவலைகள் போக்கும் 10 வழிகள்

Spread the love

மனக்கவலை என்பது இன்று நேற்று ஆரம்பமானது அல்ல பல காலமாக அதைப் பற்றியே சிந்தித்து உருவானது. எனவே, கவலைகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துங்கள்.

·     கவலைகள் சுவாசத்தையும், செயல் திறனையும் குறைக்கும். எனவே கவலைகளை மறந்து சுதந்திரமாக ஆழமாக சுவாசியுங்கள் உங்கள் செயல் திறன் அதிகரிப்பதை உணருங்கள்.

·     கவலைகளில் 40 சதவீதம் நடந்ததைப் பற்றியும் 50 சதவிகிதம் நடக்கப் போவதைப் பற்றியும் 10 சதவிகிதம் நடந்து கொண்டிருப்பதைப் பற்றியே உள்ளன எனவும், இவற்றில் 90 சதவிகிதம் நடக்காத நடக்க முடியாத தேவையற்ற சிந்தனைகளே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

·     மனக்கவலையைப் குறைப்பதற்கு ஒர் எளிய வழி நடந்து முடிந்த / செய்துவிட்ட தவறுகளைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது தவறுகளை அந்த நிமிடமே மறப்போம் என உறுதி கொள்வது.

·     திறமை வாய்ந்தவர்கள் செய்துவிட்ட கவலை தரக்கூடிய செயல்களை கண்டும் காணாதது போல இருந்து விடுவர் (Over look) இவை மனக்கவலைகளை பெரிதும் குறைத்திடும்.

·     கடந்த காலத்தைப் பற்றியே சிந்திக்காமல் எதிர் காலத்தில் நம்பிக்கை உடையவராகவும் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற சிந்தனையுடனும் இருத்தல் அவசியம்.

·     கடவுள் என்னை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்துள்ளார் என நம்ப வேண்டும், சிந்திக்க வேண்டும். அமைதியாகவும் சந்தோஷமாகவும் அனைத்து கவலைகளையும் மறந்து இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

·     குப்பைகளை தூக்கி வீசுவது போல உங்கள் மனக்கவலைகளை உங்கள் மனதை விட்டு தூக்கி எறிந்து விட்டு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

·     தேவையற்ற சிந்தனைகளை தூக்கி எறிந்து விட்டு நல்ல முற்போக்கான சிந்தனைகளை வளர்த்தும் கொள்ளுங்கள். நற்சிந்தனையாக மனதை நிரப்பிக் கொள்ளுங்கள்.

·     கடவுள் உங்களுடன் ஒவ்வொரு நிமிடமும் காலையும் இரவும் இருப்பதாக உணருங்கள் அந்த சிந்தனை உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் பிரகாசமானதாகவும் ஆக்கிடும்.


Spread the love
error: Content is protected !!