உடல் சொல்லும் 10 அறிகுறிகள்

Spread the love

பிரபஞ்சத்தின் சிருஷ்டிகளில் சிறந்தது மனித உடல். நோய் வந்தால் கூடிய மட்டும் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் மனித உடல், தன்னால் முடியாவிட்டால், முன் எச்சரிக்கையாக சில அறிகுறிகளை காட்டுகிறது. அந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் நாம் கவனித்தால் சிக்கல்களை தவிர்க்கலாம். உடல் சொல்லும் சில அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

மூச்சு விடுவதில் கஷ்டம்

அதிக வேலை செய்தாலோ, மாடிப்படி ஏறினாலோ மூச்சுத்திணறல் சகஜம். ஆனால் ஒய்வில் இருக்கும் போது மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், பெருமூச்சு எடுக்கும் படி நேர்ந்தால் டாக்டரிடம் செல்வது அவசியம். பெருமூச்சுக்கு காரணங்கள் – அதீத பருமன், சுவாச தொற்றுகள், பரபரப்பு, மனச்சோர்வு (depression), அதிக தேக சிரமம், உடற்பயிற்சி, புகை பிடிப்பது முதலியன.

மார்புவலி

மார்பு பிரதேசங்களில் வலி ஏற்பட்டால் சாதாரணமாக, நாடி, சதை ‘அசிடிடி’ (அதிக அமில சுரப்பு) அல்லது தசை வலி என்று பேசாமல் இருந்து விடுகிறோம். மார்வலியை அலட்சியம் செய்வது தவறு. பல காரணங்கள் இருந்தாலும், மாரடைப்பாக (பிமீணீக்ஷீt கிttணீநீளீ) ஆக இருக்கலாம். இதயம், நுரையீரல், தசைகள், விலா எலும்புகள், நரம்புகள், தசை நார்கள், போன்ற அவயங்களின் வலியாக இருக்கலாம். உடனே டாக்டரிடம் செல்வது நல்லது.

நீர்க்கோவை

உடலில் நீர் சேர்ந்து கொண்டு, உடல் (குறிப்பாக கால்கள்) வீங்குவது நீர்க்கோவை எனப்படும். சில மருந்துகளின் உபயோகம், உடலுழைப்பு இல்லாமை, சூடு, மாதவிடாய், கர்ப்பமாதல் முதலியவற்றால் நீர்க்கோவை தோன்றும். தவிர சிறுநீரக கோளாறு, நுரையீரல், கல்லீரல் கோளாறு, ஒவ்வாமை, நீரிழிவு இவைகளும் நீர்க்கோவைக்கு காரணமாக இருக்கலாம். எனவே டாக்டரை நாடவும்.

மரத்துப்போதல், உடல் கூச்சம்

இந்த நிலை உடலில் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் கை, கால்கள் குறிப்பாக அடிக்கடி மரத்துப் போகும். உடலுழைப்பில்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தால் இவை ஏற்படும். இல்லை, நரம்பு பாதிப்பு, முதுகுத் தண்டு பாதிப்பு, உடல் அவயங்களுக்கு சரிவர இரத்தம் பாயாமல் இருப்பது முதலியவை காரணமாகும். இந்த மாதிரி உடல் அவயங்கள் மரத்துப் போதல், முழு கூச்சம் ஏற்படுதல், நீரிழிவு, ஒற்றைத் தலைவலி, மூளைத்தாக்கு, (Strok) தசை வியாதிகள், பக்க வாதம் முதலியவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே இந்த அறிகுறிகள் இருந்தால் டாக்டரிடம் செல்லவும்.

தலைசுற்றல்

நீங்கள் திடீரென்று உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்திருக்கும் போது தலை சுற்றல் ஏற்படலாம். இதன் காரணம் நடுக்காது அவயங்கள் சமச்சீராக இல்லாமல் போதல், மூளை பாதிப்பு, மூளையிலிருந்து காதுகளுக்கு செல்லும் நரம்பு பாதிப்பு போன்றவை காரணமாகலாம்.

ஜுரம்

ஜுரம் உடலின் சக்தியை உறிஞ்சு விடும். ஜுரத்துடன் குளிரும் இருக்கும். ஜுரம் நம் உடலில் ஏற்படும் தொற்று வியாதிகளின் முதல் அறிகுறி. நமது உடலில் ஏதோவொரு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை. நார்மலாக இருக்க வேண்டிய உடல் வெப்பம் 98.6 டிகிரி செல்சியஸ் இந்த வெப்ப நிலை 102 டிகிரி செல்சியஸ்க்கு மேல் போனால் உடனே டாக்டரிடம் செல்லவும்.

அடிவயிற்று வலி

வயிற்று வலி சகஜமாய் ஏற்படும் ஒரு பாதிப்பு. தொடர்ந்து வயிற்று வலி இருந்தால் அப்பென்டிசிடிஸ், வயிறு கோளாறுகள், மலச்சிக்கல், அஜீரணம், உணவு விஷமாவது (Food Poisoning) அல்சர், சிறுநீரக கோளாறுகள் மற்றும் சிறுநீர் பாதை தொற்று நோய்கள் முதலியன காரணமாக இருக்கலாம். வயிற்றுவலியை அலட்சியம் செய்யாமல் டாக்டரிடம் செல்வது நல்லது.

விக்கல்

நாம் அவரசஅவரசமாக சாப்பிடும் போதும், மிளகாயை தவறுதலாக சாப்பிடும் போதும் உடலின் டயாஃபர்ம் (Diaphragm) எரிச்சல் அடைகிறது. விக்கல் சில நிமிடங்கள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் நாள்முழுவதும் தொடர்ந்தால் அதாவது ஆஸ்த்துமா, ப்ராங்கைடிஸ், வயிறு, சிறுநீரக, கல்லீரல் கோளாறுகளாக இருக்கலாம். சில சமயங்களில் மாரடைப்பு கூட விக்கலை தோற்றுவிக்கும். எனவே விக்கல் நீடித்தால் டாக்டரிடம் செல்வது நல்லது.

தலைவலி

தலைவலிப்பது தற்போது சர்வசாதாரணமான பாதிப்பு. பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக சைனஸ், அதிக இரத்த அழுத்தம், மனபாரம், அசிடிட்டி, தூக்கமின்மை, சோகை, நரம்புத்தளர்ச்சி, உடல் இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவு முதலியவை காரணமாகலாம். தொடர் தலைவலி, மூளைபாதிப்பு, மூளையில் இரத்தம் கசிதல், மூளை ஜுரம் முதலியவற்றின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்.

ஜலதோஷம்

ஃப்ளூ – ஜலதோஷத்திற்கு சாதாரணமாக மருந்து பலனிப்பதில்லை. காரணம் 200 வைரஸ்கள் ஜலதோஷத்தை உண்டாக்கலாம். ஆனால் ஜலதோஷம் ஜுரம், இருமல் இவற்றுடன் இருந்தால் அது நிமோனியா போன்ற தீவிர வியாதிகளின் அறிகுறியாகும். கபம், ஜுரம் இவற்றுடன் கூடிய ஜலதோஷ பாதிப்பு இருந்தால் உடனே டாக்டரிடம் செல்லவும்.

முருகன்


Spread the love