10 புகழ்பெற்ற பருப்பு உணவுகள்.

Spread the love

அனைத்து பருப்பு வகைகளிலும் புரோட்டின் சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இந்தியா முழுவதும் பருப்புக் குழம்பு சமைக்கின்றனர். நம் வீட்டில் அதிகமாக செய்வது சாம்பாராகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்தியா முழுவதும் செய்யப்படுகின்ற பருப்புக் குழம்புகளில் மிகவும் பிரபலமான 1௦ வகையான உணவுகள் என்னென்ன என்பது பற்றிப் பார்க்கலாம்.

  1. ஆம்த்தி – இந்த வகை பருப்புக்குழம்பு மகாராஷ்டிராவில் மிகவும் பிரசித்தமானது. இந்த குழம்பில் சிறிது காரம், புளிப்பு, இனிப்பு அனைத்தும் கலந்திருக்கும். இது துவரம்பருப்பில் செய்யப்படுகிறது. மேலும் இதனை மசூர் பருப்பு மற்றும், கடலைப் பருப்புகளிலும் செய்யலாம்.
  2. சாம்பார் – தஞ்சாவூர் மராட்டியர்களால் 17 – ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. தமிழ் நாடு, ஆந்திரபிரதேஷ், கர்நாடகம் என்று அனைத்து பகுதிகளிலும் சாம்பார் மிகவும் பிரசித்தம் பெற்றது. ஒவ்வொரு இடத்திலும் சில மாற்றங்கள் செய்து சிறப்பாக்கப்படுகிறது.
  3. தால் மக்ஹ்னி – இந்த வகை பருப்புக்குழம்பு பஞ்சாபியரின் பிரசித்தமான உணவாகும். இது கருப்பு உளுந்து, ரஜ்மா, வெண்ணெய், கிரீம் சேர்த்து செய்யப்படுகிறது. நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாப்வாலாக்களின் தாபாக்களில் இதை ருசிக்கலாம்.
  4. திக் – ரி – கி – தால் இந்த பருப்புக்குழம்பு மிகவும் விநோதமானது. இது ஹைதராபாத் மற்றும் இராஜஸ்தானில் மிகவும் பெயர் பெற்றது. மண்ணால் செய்யப்பட்ட ஒரு பாத்திரத்தை உடைத்து அதில் சிறு பகுதியை எடுத்து குழம்பிலிட்டு கொதிக்கவிடுவர். இந்த திக் – ரி – கி – தால் மண்வாசனையுடன் பரிமாறப்படுகிறது.
  5. குஜராத் தால் – குஜராத்தில் மிக அதிகமாக செய்யப்படும் தால் வகை இது. இந்த குழம்பை துவரம்பருப்புடன், காய்கறிகள் மற்றும் வேர்க்கடலை சேர்த்து சமைக்கின்றனர்.
  6. லக்னோ தால் – நவாப்களின் உணவிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த தால் பாலில் செய்யப்படுகிறது. எனவே இது சுவை மிகுந்து காணப்படுகிறது.
  7. பஞ்சமீல் அல்லது பஞ்சரத்ன தால் – மகாபாரதத்தில் இந்த பஞ்சரத்ன தால் குந்தி தேவியால் செய்யப்பட்டதாக மகாபாரதம் கூறுகிறது. இந்த தால் ஐந்து வகையான பருப்புகளைக் கொண்டு செய்யப்படுகிறது. இதில் ஒன்பது வகையில் இந்தியாவில் செய்யப்படுகிறது.
  8. தல்மா – ஒரிசாவில் இது புகழ்பெற்றது. இது துவரம் பருப்பில் காய்கறிகள் சேர்த்து சூப்பைப் போல் மிகவும் சாதாரணமாக செய்யப்படும் உணவாகும்.
  9. டொமாட்டோ பப்பு – இந்த வகை ஆந்திரப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகையாகும். இது நாம் செய்யும் பருப்பு பொடி போல் செய்யப்படுகிறது.
  10. தால் – கோஸ்ட் – இது ஒரு அசைவ வகை உணவாகும், இதை மட்டன் தாள்சா என்றும் கூறுவர். ஹைதராபாத் மற்றும் லக்னோவில் இது மிகவும் பிரசித்தமானது. இந்த தாலை இஸ்லாமியர்கள் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Spread the love
error: Content is protected !!