யோகா நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது. எவ்வாறென்றால் உடலின் மூட்டுக்கள், முக்கியமாக முதுகுத் தண்டு. இவற்றை யோகா ஆரோக்கியமாக வைக்கிறது. யோகாசனங்கள் உடலின் முக்கிய பாகமான, சுமை தாங்கியான முதுகு தண்டை சீராக்கி, பயிற்சி தருகின்றன. இதனால் முதுகுத் தண்டு காக்கும் நரம்புகளும் வலிமை பெறுகின்றன.
பெரும்பாலான ஆசனங்கள் முதுகுத்தண்டை முன்னும், பின்னும், பக்கவாட்டில் வளைத்தும் பயிற்சி தருகின்றன.
அடுத்த முக்கியமான உடல் அவயம் நாளமில்லா சுரப்பிகள். இவைகள் தான் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை ‘கன்ட்ரோல்’ செய்கின்றன. இவைகளின் பட்டியல்
சுரப்பி
பிட்யூடரி
அட்ரீனலின்
கணையம்
பாலியல் சுரப்பிகள்செய்யும் வேலை
உடல் வளர்ச்சி, பாலியல் ஹார்மோன்கள் உற்பத்தி
வளர்சிதை மாற்றம் (Metabolism), உடல் வளர்ச்சி
ஸ்ட்ரெஸ் (Stress) சமயங்களில் அதிகம் சுரக்கும். உடலும், மூளையும் களைப்படையாமல் உழைக்கச் செய்யும்
உடல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் (முக்கியமாக இன்சுலீன் சுரப்பு)
ஆண், பெண்களின் ஹார்மோன்கள் உற்பத்தி
சமநிலையில் வைக்கும் ஆசனங்கள்
சிரசானம், பாதஹஸ்தாசனம், விபரீத கரணி
சர்வங்காசனம், மச்சாசனம்
ஹலாசனம், சூர்ய நமஸ்காரம், பாத ஹஸ்தாசனம், மயூராசனம், தநூராசனம், சக்ராசனம்
ஹலாசனம், தநூராசனம், மயூராசனம், புஜங்காசனம், வக்ராசனம்
சிரசானம்,சர்வங்காசனம், விபரீதகரணி, பத்ராசனம்
யோகாசனங்கள் ரத்த ஒட்டத்தை அதிகரித்து நாளமில்லா சுரப்பிகளுக்கு அதிக ரத்தம் கிடைக்கச் செய்கின்றன. அதிக ரத்தம் என்றால் அதிக ஊட்டச்சத்து, அதிக ஆக்சிஜன் – இவை நாளமில்லா சுரப்பிகளுக்கு கிடைப்பதால் அவை ஆரோக்கியமாக இருப்பதில் அதிசயமென்ன? இது யோகாவின் சிறப்பு அம்சம்.
தசைப்பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. தசைகள் வலிமை பெற்று விளங்கும்.
உடலின் ஒவ்வொரு நிலையையும் சுத்திகரித்து போஷாக்கு அளிக்கும்.
வீரியம், வலிமை, ஒருமுனைப்படுவதில் அபிவிருத்தி ஏற்படும்.
உடல் எடையை குறைக்கும்.
தினசரி, உடலுழைப்பு, வேலைகளால் ஏற்படும் களைப்பை யோகாசனங்கள் போக்கும்.