Ayurveda - Ayurvedic - Tamil

வயிற்றையும் வாட்டும் நீரிழிவு வியாதி
நீரிழிவு நோய் உடலின் எந்த அவயத்தை வேண்டுமானாலும் தாக்கும். ரத்தத்தில் சர்க்கரை தேங்கி, ரத்த ஓட்டத்தை பாதித்து, நரம்புகளையும் வாடச் செய்யும். ஏனென்றால் சர்க்கரை வியாதியினால் உடல் அவயங்களுக்கு சக்தி கிடைக்காது.

நீரிழிவு உண்டாக்கும் அழிவுகளில் ஒன்று இரப்பை பாதிப்பு. இதை வயிற்றில் தாமதிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் நீக்கம் என்பார்கள். இதன் காரணங்களை வயிற்றின் வெளியேறும் பாதை அடைப்பு மற்றும் கேஸ்ட்ரோபரேசிஸ்.  இவை இரண்டும் உருவாக முக்கிய காரணம் டயாபடிஸ்.

இரைப்பை அடைப்பு  வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு செல்லும் குறுகிய பாதை வழியாகத்தான் உணவு செல்லும். இந்த பகுதி பைலோரஸ் எனப்படும். இந்த பாதையில் அடைப்பு ஏற்பட்டால், உணவு சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினத்தை நிதானமாக சென்று அடையும். இல்லை அடைத்துக் கொண்டு கொஞ்சமும் போகாமல் தேங்கிவிடும். அல்சர், பைலோரஸிஸ் தொற்றுநோய், கான்சர் இவை இந்த அடைப்பை உண்டாக்கலாம்.

கேஸ்ட்ரோ பரேஸிஸ்

வயிறு தன் உள்ளிருக்கும் பதார்த்தங்களை ‘காலி’ செய்ய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சாதாரணமாக வயிறு தனது தசை அசைவுகளால் உணவை ஜீரணமாவதற்காக சிறுகுடலுக்கு செலுத்தும். இதை ‘கன்ட்ரோல்’ செய்வது “வேகஸ்”  நரம்பாகும். மூளையிலிருந்து வரும் 12 ஜோடி நரம்புகளில் வேகஸ§ம் ஒன்று. இந்த நரம்பு தான் ஜீரண மண்டல உறுப்புகள் இயங்க வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரக்க, உணவு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு போக, இத்யாதி இயக்கங்களை இயக்கும் தலைவர். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் ஜீரண மண்டலம் ஸ்தம்பித்து விடும். உணவின் பயணம் ஆமை போல் நகரும். இல்லை நின்று விடும்.

கேஸ்ட்ரோபரேஸில் எப்படி வருகிறது?

முதல் காரணம் டயாபடிஸ் – சர்க்கரை வியாதி, நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் அபரிமிதமாக படர்ந்திருக்கும் சர்க்கரை நரம்புகளில் வேதிய மாற்றங்களை தோற்றுவித்து, போதாக் குறைக்கு நரம்புகளுக்கு ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். கொஞ்ச நாட்களில் ரத்த சர்க்கரை, வேகஸ் நரம்பை பீடித்து பாதிக்கும்.

இதர காரணங்கள்

• வயிறு அறுவை சிகிச்சை மற்றும் வேகஸ் நரம்பு துண்டிப்பு

• வைரஸ் தொற்று நோய்கள்

• அனோரெக்ஷியா – நர்வோசா மற்றும் புலீமியா வியாதி

• போதை மருந்துகள், குடல் தசை இயக்கத்தை குறைக்கும் சில மருந்துகள்

• தசை நார்கள் பாதிப்பு – அமிலாய்டோசிஸ், ஸ்க்லாரோ டெர்மா

• நரம்பு மண்டல வியாதிகள் – பார்க்கின்சன்ஸ் போன்றவை

• வளர்சிதை மாற்ற வியாதிகள், தைராய்டு சுரப்பி பாதிப்புகள்.

அறிகுறிகள்

• நெஞ்செரிச்சல்

• மேல் வயிற்றில் வலி

• குமட்டல்

• ஜீரணமாகாத உணவை வாந்தி எடுத்தல் சில சமயங்களில் சாப்பிட்ட பல மணி நேரங்களுக்கு பிறகு.

• கொஞ்சம் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணர்வு

• எதுக்கலித்தல்

• எடை குறைவு, பலவீனம், சக்தியின்மை

• அடிவயிறு உப்புசம்

• கட்டுக்குள் வராத இரத்த சர்க்கரை அளவு

• பசியின்மை

• வயிற்றுப் பகுதியில் இழுப்பு

விளைவுகள்

• இந்த நோயால் வயிற்றில் நீண்ட நேரம் உணவு தேங்கியிருக்கும். உணவு அழுகி புளித்துப் போய் பாக்டீரியாக்களை உருவாக்கும். தவிர தேங்கிய உணவு ‘களி மொத்தை’ போல் கட்டிகளாகி சிறுகுடலுக்கு உணவு போகும் பாதையை அடைத்து விடலாம். இந்த கட்டிகள், குமட்டல், வாந்தி உண்டாக்கும். சிறுகுடலின் பாதை அடைப்பு அபாயகரமானது.

• சிறுகுடலில் தேங்கிய உணவு நிறுத்தி நிதானமாக சிறுங்குடலுக்கு வந்து, அங்கே ஜீரணமாகையில், ரத்த குளுகோஸ் அளவு ஏறும் தவிர எப்போது குடல் காலியாகும், எப்போது உணவு சிறுகுடலுக்கு செல்லும் என்பது தெரியாது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கண்டபடி ஏறி, இறங்கும். இந்த நிலையில், சர்க்கரை லெவலை கட்டுப்படுத்துவது கடினம்.

• சர்க்கரை அளவு அதிகரித்தல் நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம், மூளைத் தாக்கு, பக்கவாதம் ஏற்படலாம். மாறி மாறி நீரிழிவு வயிற்றையும், வயிற்றுக் கோளாறுகள் நீரிழிவு நோயாளிகளை பாதித்துக் கொண்டே இருக்கும். இதன் அடிப்படை காரணமான சர்க்கரை லெவல் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம்.

இந்த இரைப்பை கோளாறை கண்டுபிடிக்க பரிசோதனைகள்

1. என்டோஸ்கோபி

2. அல்ட்ரா சவுண்ட்

3. பேரியம் எக்ஸ்-ரே

இதர தீவிர பரிசோதனைகள்

1. வயிற்றை காலி செய்து எடுக்கும் சிண்டிகிராஃபி (நிணீstக்ஷீவீநீ மீனீஜீsஹ்வீஸீs sநீவீஸீtவீரீக்ஷீணீஜீலீஹ்) இந்த சோதனையில் உப்பு சப்பு இல்லாத உணவு கொடுக்கப்படும். இந்த உணவில் கதரியக்கம் உள்ள பொருள் ஒன்றும் கலந்திருக்கும். ஸ்கானில் இந்த கதிரியக்கப் பொருள், வயிறு காலியாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை சுட்டிக்காட்டும்.

2. மூச்சுப் பரிசோதனை – இதில் ஐஸோடோப் (மிsஷீtஷீஜீமீ) கலந்த உணவு நோயாளிக்கு கொடுக்கப்படும். மூச்சுக் காற்றை பரிசோதனை செய்து கார்பன் -டை-ஆக்ஸைட் (ஐசோடோப் மூலமாக) அளவு கணிக்கப்படும் இதிலிருந்து வயிறு காலியாகும் நேரம் தெரியவரும்.

சிகிச்சை முறைகள்

• முதலில் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையை ‘நார்மலுக்கு’ கொண்டு வர வேண்டும். கேஸ்ட்ரோபரேசிஸ் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் அளவை அதிகமாக்க வேண்டும். அடிக்கடி போட்டுக் கொள்ளவும் நேரிடலாம்.

• இன்சுலினை உணவு உண்பதற்கு முன் எடுத்துக் கொள்ளாமல், உணவுண்ட பின் எடுத்துக் கொள்ளலாம்.

• குளுகோஸட லெவலை அடிக்கடி சோதித்துக் கொள்ளலாம் – குறிப்பாக உணவிற்கு பிறகு / இன்சுலின் போட்டுக் கொண்ட பிறகு.

உங்கள் டாக்டர் இந்த முறைகளை பற்றி உங்களுக்கு விவரிப்பார்.

இரண்டாவது உணவு முறை – மூன்று வேளைக்கு பதில், அதே அளவு உணவை 6 வேளைகளாக பிரித்து உண்ணவும். சில சமயங்களில், டாக்டர் ஒன்றிரண்டு நாட்கள் வெறும் திரவப் பதார்த்தங்களை மட்டும் உட்கொள்ளச் சொல்லுவார். ஊட்டச்சத்து செறிந்த, முழு உணவின் சக்தியை உள்ளடக்கிய பல திரவ உணவுகள் தற்போது கிடைக்கின்றன. கொழுப்பு உணவுகளை தவிர்க்கும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் பொதுவாக நல்ல உணவுகள். ஆனால் கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்கள் நார்ச்சத்து உணவுகளை தவிர்க்கவும். முற்றின நாட்பட்ட கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்களுக்கு வயிற்றில் ஓட்டை போட்டு, அதன் வழியே சத்து நிறைந்த திரவ வடிவில், ஆகாரம் செலுத்தப்படும். மருந்துகளும் செலுத்தப்படும்.

மருந்துகள்

• மெட்டோகுளோப்ராமைடு, எரித்ரேமைசின், டாம்பெரிடோன் போன்ற மாத்திரைகள் இரைப்பையின் தசைகளைத் தூண்டி இயங்க வைக்கின்றன.

• பேட்டரியால் இயங்கும் ஒரு கருவி வயிற்றில் மின் அதிர்வுகளை உண்டாக்கி இரைப்பையில் இயக்கத்தை தூண்டி விடும். இதனால் வாந்தி, குமட்டல், இவை நின்றுவிடும்.

• மறுபடியும் சொல்லுவது – டயாபடிஸ் தான் கேஸ்ட்ரோபரேசிஸ் உண்டாக முக்கிய காரணம். இதை நீரிழிவு நோயாளிகள் கருத்தில் கொண்டு வருமுன் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

• ஆயுர்வேதத்தில் டயாபடிஸ், மற்றும் சம்மந்தப்பட்ட வயிறு கோளாறுகளுக்கு, பல மருந்துகள் உள்ளன. இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளுடன் உட்கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

முடி உதிர்கிறதா? எச்சரிக்கை தேவை
hairfall1முடி கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கலாம்.

தலை வாரும்போது முடி கொத்தாகக் கையோடு வருகிறதா? வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா? நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா? பதட்டப்படாதீர்கள்.

முடி கொட்வது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை.

வேதனைப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் இதோ ஒரு ஆறுதல். கொட்டுகின்ற முடிகளில் ஒன்றிரண்டை எடுத்து முடியின் வேர்ப்பகுதியை உற்று நோக்குங்கள். மிக மெலிதான நுண்ணிய வெள்ளை உருண்டை ஒன்று இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு ஒரு சிறிய வெள்ளை உருண்டை இருந்தால் உங்கள் முடி இயல்பாகவே இருக்கிறது. அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவ்வாறு இல்லாமல் போனாலோ அல்லது முடி இழப்பு மட்டுக்கு மீறி இருப்பதுடன் அது தொடர்ந்தாலோ நீங்கள் சரும நோயியலார் அல்லது முடியியலார் ஒருவரைக் கண்டு ஆலோசனை பெறுவது நல்லது.

இன்றைக்கு முடி கொட்டுவதைத்தடை செய்யக்கூடிய ஒரே மருந்து ரோகெய்ன் தான். இது வெளி நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. ஒரு மாத காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அளவு ரோகெய்ன் மருந்தின் விலை சுமார் ரூ. 5000/- ஆகலாம். முடியியல் துறையினர் உணவில் கவனம் செலுத்தச் சொல்வதுடன் ஓய்வு, அமைதி, உற்சாகம் போன்ற மனநிலை தொடர்புடைய செய்கைகளின் பயனையும் மிதமான உடற்பயிற்சியின் தேவை பற்றியும் குறிப்பிடுவார்கள்.

பல நேரங்களில் கீழ்க்கண்ட ஏதாவதொரு காரணத்தாலும் முடி கொட்டக் கூடும். ஆனால் இது தற்காலிகமானது தான். முயன்றால் தவிர்த்துவிட முடியும்.

இறுக்கமும், இழுவையும்:

முடியை இறுக்கமாகவும், இழுத்துப் பிடித்தும் கட்டுகின்ற போதும், பின்னல் போடும் போதும் முடி பிடுங்கிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. எனவே போனிடெயில் போடுகிறவர்களும், இழுத்துப் பின்னலிடுகின்றவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு:

உடலில் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கின்ற போது முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் முளைக்கும். கருவுற்றிருக்கும் காலத்தில் முடி கொட்டாமலிருப்பதற்கு இந்த ஹார்மோன் அளவு உயர்ந்திருப்பதே காரணம். குழந்தை பிறந்த பின்னர் முடி கொட்டுவதற்குக் குறைந்து விட்ட ஹார்மோன் காரணமாகிறது. ஆனால் இது ஐந்தாறு மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ சரியாகலாம். அதே போன்று நடுவயதுப் பெண்களின் உடலில் எஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்புக் குறைவதால் முடி எளிதாகக் கொட்டுவதுடன் அடர்த்தியும் குறைந்து விடுகிறது.

சோகை / காய்ச்சல்கள் /

கருத்தடை மருந்துகள்:

உடலில் இரத்தம் குறைவாக இருந்து சோகை நோய் காணப்பட்டாலோ, அல்லது டைபாய்டு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்களில் அடிபட்டு மீண்டிருந்தாலோ அன்றி வாய்வழி மற்றும் ஊசிவழிக் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தி இருந்தாலோ முடி கொட்டுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு, மேற்குறிப்பிட்ட காரணங்கள் எதானலாவது முடி கொட்டுகிறது என்று நீங்கள் சந்தேகப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறுங்கள்.

உணவு:

முடியின் வளர்ச்சியில் உணவின் பங்கு கணிசமாகவே உள்ளது. பெண்கள் தங்கள் உணவு முறைகளை அடிக்கடி மாற்றுவதனாலும், அளவுக்குக் குறைவாக உண்பதாலும் உணவில் ஊட்டச் சத்துக்கள் விட்டமின்கள் குறைவாக இருப்பதாலும் முடி கொட்டக் கூடும்.

முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்:-

1. தினசரி காலை எழுந்தவுடன் 15 – நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலஹீனத்தைப் போக்கும்.

2. நெல்லிக்காய் சேர்ந்த தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கேசத் தைலத்தை உபயோகப்படுத்தவும். இது முடி உதிர்வதை தடுக்கும் முடி தேவையான வைட்டமின் ‘சி’ சத்துக்களை அளிக்கும்.

3. தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.

4. சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும். மேற்கூறியவற்றுள் வசதிக்கேற்ப ஒன்றிரண்டு முறைகளை கையாளலாம்.

இரத்தக் கொதிப்புள்ளவர்களுக்குப் பத்துக் கட்டளைகள்
உங்களுக்கு இரத்தக் கொதிப்பு இருக்கிறதா? அப்படியானால் இதோ சில யோசனைகள்:

1. இரத்தக் கொதிப்பு ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல. அது சுகவீனத்தின் அடிப்படையான ஒரு குறியே.

2. சுவாசம் சீராக வேண்டும். தீர்க்கமாக மூச்சு இழுத்து விட்டுப் பழக வேண்டும். இரத்தக் கொதிப்பு இரத்தக் குழாய்களையும் இருதயத்தையுமே பொறுத்தது. ஆகவே அது உடலில் ஓடும் இரத்தத்தைப் பொறுத்திருக்கிறது.

3. தினசரி கவனமாகப் பயிற்சி செய்யுங்கள். இது உடலை நன்றாக வைக்கும். இரத்த ஒட்டம் சரியாக நடைபெறுவதற்கு இது பெரிதும் துணை செய்யும்.

4. அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் அதிர்ச்சியும் மனக் கிளர்ச்சியும் இரத்தக் கொதிப்பை அதிகம் ஆக்கும். மன வேலைகளில் ஈடுபடும் பொழுது இரண்டு மணிக்கு ஒரு தடவை ஐந்து நிமிஷமாவது ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் அறையிலாவது சற்று நடமாடினால் போதும். உடலுழைப்பின் பொழுது, உணவு வேளைக்குப் பிறகு ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

5. மலம் தினசரி கழிய வேண்டும். மலச்சிக்கல் அதிகம் ஆகிவிட்டால், இரத்த ஓட்டம் மெதுவாகி, கொதிப்பு ஏற்படக் காரணமாகிறது. இரண்டு தடவையாவது தினசரி மலம் கழிய வேண்டும். ஆறு தடவை ஜலபாதை செய்ய வேண்டும். நன்றாக வேர்வையும் வர வேண்டும்.

6. உடலில் ஆல்கலைன் சத்து அதிகம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இது இழையங்களைத் தூய்மைப் படுத்துவதோடு, இளஞ் செல்லுகளை வளர்த்துப் புத்துயிர் கொடுக்கிறது. பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் இவை எல்லாம் நல்ல காரச் சத்துள்ள உணவுகள்.

7. இறைச்சி சாப்பிடக் கூடாது. இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணம், கொலஸ்ட்ரால் என்ற வழவழப்பான ஒரு பொருள் இரத்த நாடிகளைத் தடிக்கச் செய்வதே. இந்தக் கொலஸ்ட்ரால் இறைச்சியில் அதிகம் உண்டு. ஆகவே, இறைச்சிக்குப் பதிலாக பால், பாலாடை, அவரை, பட்டாணி, பீன்ஸ், கொட்டைகள், முழுத் தானியங்கள் உபயோகிக்க வேண்டும்.

8. இரத்தக் கொதிப்பை வெள்ளைப் பூண்டினால் குறையுங்கள். இதனால் இரத்தக் கொதிப்பு விரைவில் தணிகிறது. பதார்த்தங்களுக்கு ருசி கொடுக்கவும், சூப் வகைகளுக்கும் வெள்ளைப்பூண்டு உபயோகமாகிறது. அரைப் பூண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு கோப்பைப் பாலில் காய்ச்சி, இரவில் சாப்பிட்டால் நல்ல டானிக் போல் அமையும்.

9. மனக்கிளர்ச்சி கூடாது. கோபம், பொறாமை, பகை, கவலை இவை எல்லாம் மூளைக் கோளங்களைப் பாதிப்பதோடல்லாமல், இரத்தக் கொதிப்பையும் அதிகமாக்குகிறது. எப்பொழுதும் மன அமைதி பெற்று, சந்தோஷமாயிருங்கள்.

10. சாத்வீகமாக வாழுங்கள். அதிக இரத்தக் கொதிப்பு என்றால் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மிதமாக இருக்க வேண்டும்.

பாதங்களை பாருங்கள்
முக ஒப்பனை செய்து கொள்வதெப்படி, தலையலங்காரத்தை எந்த ஸ்டைலில் மாற்றிக் கொள்ளலாம், கண்கள், கைகளை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி எல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளும் பெண்கள், ஏனோ கால் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதுடன் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதும் இல்லை.

“கால்கள் வேதனைப்பட்டால் உடல் முழுவதும் வேதனைப்படும்” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. இதில் பெண்களுக்கென அப்படி என்ன தனியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. என்று நீங்கள் கேட்கலாம். பெண்களது கால்கள், ஆண்களின் கால்களை விட நான்கு மடங்கு அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. குதியுயர்ந்த செருப்புக்களை அணிவதாலும் நின்ற படி சமைக்கும் சமையல் அறைகளும் நடையை குறைத்துக் கொண்ட வாழ்க்கை முறைகளுமே இதற்குக் காரணமாகின்றது.

எனவே பெண்கள், கால்களின் பராமரிப்பிற்கு என்று அதிக கவனம் எடுத்துக் கொள்வது என்பது மிக மிக அவசியமாகிறது. அழகிய பாதங்கள் அனைவருடைய கவனத்தையும் கவரும் அளவிற்கு சிறப்பைப் பெற்றிருக்கின்றன. பாதப்பராமரிப்பில் முக்கிய இடத்தை வகிப்பது அவரவர் பயன்படுத்தும் செருப்புகள் தான்.

அண்மைக் காலமாக பெரும்பாலான பெண்கள் cut shoe, high – helad shoe என்று சொல்லப்படும் நாகரீக செருப்புக்கள் மற்றும் தாங்கள் உடுத்தியிருக்கும் உடைகளின் வண்ணங்களிலேயே அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

நீங்களும் அவ்வாறே என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் shoe, high – helad shoe – க்களை மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுங்கள். இவை கால் விரல்கள் தொர்த்த நிலையில் இருப்பதற்குப் போதுமான இடத்தைக் கொண்டுள்ளனவா என்றும் இவற்றைக் காலில் அணிந்து கொண்டு நடக்கும் போது எந்த சிரமமும் இல்லாதவாறும் இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். குதிங் காலுக்கும், ஆர்ச் போன்ற வளைவைப் பெற்றிருக்கும் கால்களின் மையப் பகுதிக்கும் சரியான பக்க வலுவை (support)   நீங்கள் வாங்கப் போகும் காலணி அல்லது

பாதங்களில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கோளாறுகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

1. மிகுந்த அழுத்தத்தினால் ஏற்படும் கால் ஆணி, கால் காய்ப்பு (corn, calluses).

2. பூஞ்சாளத் தொற்றினால் ஏற்படும் பழுப்புநிறப் புள்ளிகள் (Brown Spots).

3. பூஞ்சாள வகை நுண்மத் தொற்றாலும், ஈரமான சாக்ஸ் மற்றும் செருப்புகளால் ஏற்படும் பித்த வெடிப்பு (Athlets Foot).

4. கால் வரல்களில் குறிப்பாக கட்டை விரலில் நகம் வளர்ந்து, மடங்கி, உள் தசைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் பாதிப்பு.

சரியான செருப்புகளை உபயோகிக்காத காரணத்தால் மூட்டுக்கள்

வீக்கமடைக்கின்றன. இது பரம்பரை காரணமாக ஏற்பட்டாலும் சரியான செருப்புகள் அணிவதன் மூலம் சீர் செய்ய இயலும்.

சருமத்தை மென்மையாக்க உதவும் ஆலிவ் எண்ணெய், கால் மற்றும் பாதங்களுக்கும் சிறந்த நன்மையளிக்கின்றது. கோடை காலங்களில் செருப்புகளில் உட்புறம் சிறிதளவு பவுடரை தூவினால் கால்கள் மெத்தென்ற உணர்வுடன் இருக்கும்.

கால்களைக் கழுவும் நீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கழுவினால் கால்கள் தூய்மையாகவும், பொலிவாகவும், தோற்றமளிக்கும். கால்களைக் கழுவுவதற்கு வெந்நீர் பயன்படுத்தக் கூடாது. இது காலில் உள்ள இயற்கையான சரும மென்மையை நீக்கி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. அதனால் பாதங்கள் வெடிப்பு மற்றும் காய்ப்பிற்கு உள்ளாகிறது.

கால் பாதங்களுக்கு வலிமையூட்டும் சில பயிற்சிகள்

1. வெறுங்காலுடன், கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றி சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். அதன் பின்னர் ஒரிடத்தில் அமர்ந்து கொண்டு கால் விரல்களை மேலேயும், கீழேயும் முறையே தூக்கி, கீழே இறக்கி பயிற்சி செய்யுங்கள். இது போல் குறைந்தது 50 தடவை செய்து வந்தால் சோர்வடைந்த கால்கள் புத்துணர்வு பெறும்.

2. உள்ளங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகள் வலிமை பெற, வசதியான நிலையில் (தரையிலோ, நாற்காலியிலோ) அமர்நது கொள்ளுங்கள். விரல்களை ஒன்று சேர்த்து உள்ளங்கால்களை அகலமாக விரித்து பின்னர் பழைய நிலைக்கு கொண்டு வந்து மறுபடியும் விரித்து இவ்வாறாக தொடர்ந்து 30 முறை செய்து வந்தால் கால்கள் நல்ல பலம் பெறும்.

3. பூஞ்சாள வகை நுண்மத் தொற்றாலும், ஈரமான சாக்ஸ் மற்றும் செருப்புகளால் ஏற்படும் பித்த வெடிப்பு (Athlets Foot).

4. கால் வரல்களில் குறிப்பாக கட்டை விரலில் நகம் வளர்ந்து, மடங்கி, உள் தசைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் பாதிப்பு.

5. கால்களில் மென்மையைப் பராமரிக்கவும், பாத விரல்களில் வலிமையைப் பாதுகாக்கவும், விரும்புவோர், ஒருபென்சிலை தரையிலிருந்து எடுக்கும் பயிற்சியை பின்பற்றலாம். ஒவ்வொரு காலிலும் தனித் தனியாக இப்பயிற்சியை குறைந்தது பத்து தடவைகள் மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

சரியான செருப்புகளை உபயோகிக்காத காரணத்தால் மூட்டுக்கள்

வீக்கமடைக்கின்றன. இது பரம்பரை காரணமாக ஏற்பட்டாலும் சரியான செருப்புகள் அணிவதன் மூலம் சீர் செய்ய இயலும்.

சருமத்தை மென்மையாக்க உதவும் ஆலிவ் எண்ணெய், கால் மற்றும் பாதங்களுக்கும் சிறந்த நன்மையளிக்கின்றது. கோடைகாலங்களில் செருப்புகளில் உட்புறம் சிறிதளவு பவுடரை தூவினால் கால்கள் மெத்தென்ற உணர்வுடன் இருக்கும்.

கால்களைக் கழுவும் நீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கழுவினால் கால்கள் தூய்மையாகவும், பொலிவாகவும், தோற்றமளிக்கும். கால்களைக் கழுவுவதற்கு வெந்நீர் பயன்படுத்தக் கூடாது. இது காலில் உள்ள இயற்கையான சரும மென்மையை நீக்கி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. அதனால் பாதங்கள் வெடிப்பு மற்றும் காய்ப்பிற்கு உள்ளாகிறது.

காலணிகளில் கவனம்:

செருப்புக்களும் சில வேளைகளில் கால் பாதங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே கால்களுக்கு செருப்புகளை தேர்ந்தெடுக்கும் போது, அவை கூர்மையான முனைகள் இல்லாதவாறிருக்க வேண்டும். ஏனெனில் கூரிய முனைகள் கொண்ட செருப்புகள், பாதங்களில் மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து காய்ப்புக்கள், மற்றும் எலும்புக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும். கால் பாதங்களின் அசைவிற்குப் போதுமான இடத்தைக் கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பாதங்கள் நுழைவதற்கு தகுந்த அளவு இடம் பற்றாமல் இருந்தால் அது கால்களைச் செருப்புக்களின் முனைப்பக்கம் நோக்கி நகரச் செய்து பெருந் தொந்தரவைத் தரும்.

இதோடு மட்டுமன்றி, கால் விரல்கள் மடங்கிப் போவதுடன் காய்ப்பு மற்றும் கால் விரல்களில் கோளாறுகளும் ஏற்படலாம். எனவே நீங்கள் வாங்கப் போகும் காலணி எதுவாக இருப்பினும் அதிக கவனமுடன் தேர்ந்தெடுப்பது நல்லது.

பித்த பிரகிருதிகள்
மூன்று தோஷங்களின் இரண்டாவதாக, பித்த பிரக்ருதிகளை பற்றி இப்போது பார்ப்போம். உடலில் பித்தமிருக்குமிடம்: பித்தம் உடலில் நாடிக்கும், இதயத்திற்கும் நடுவில் பொதுவாக இருக்கும். வயிற்றிலும், சிறுகுடலிலும், வியர்வையிலும், இரத்தத்திலும், கண்ணிலும், தோலில் அதிகமாக உள்ளது. மத்திய வயது உள்ளவர்களில், பித்தம் தலை தூக்கியிருக்கும். இக்னலத்தில் ரத்த்க்கொதிப்பு, மன உளைச்சல், அல்சர் இவை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம். பித்தம் உடல் சூடு, ஜுரணம் இவற்றுக்கு பொறுப்பானது. சிறுகுடலில் பித்தம் அதிகமானால், உடல் ரத்தம் முழுவதும் பாதிக்கப்பட்டு, நோய்கள் ஏற்படும். பித்தத்தின் வேலைகள். பித்த குணாதிசயங்கள் 1. பித்த மனிதர்கள் சராசரி உயரம், சராசரி உடல் கட்டமைப்பு உள்ளவர்கள், உடல் எடை சராசரி. 2. நல்ல ரத்த ஓட்ட சுழற்சியும், மலர்ந்த, சிவந்த முகமும், சருமமும் உடையவர்கள். வெதுவெதுப்பான உடலும், எண்ணண பசையுள்ள சருமமும் உடையவர்கள். 3. நடுத்தரமான தேகபலம் உடையவர்கள் 4. பசியும், தாகமும் தீவிரமாக இருக்கும். உணவுப்பிரியர்கள் 5. இவர்களுக்கு வெய்யில், சூடு ஆகாது. 6. பெண் பித்த பிரகிருதிகளுக்கு, மாதவிடாய் சீராக இருக்கும். அதிக நாள் நீடிக்கும். 7. அறிவு, செயலாற்றும் திறன், செல்வம், எல்லாம் சராசரியாக இருக்கும். 8. நகம் மிருதுவாக இருக்கும். 9. பாசமுடையவர்கள், ஆனால் சீக்கிரமாகவே கோபம் வரும் முன்கோபிகள். உடனே சாந்தமும் ஆகிவிடுவார்கள். 10. நன்றாக தூங்குவார்கள். 11. நன்றாக, சீக்கிரம் பழகிவிடுவார்கள். 12. பித்த பிரகிருதிகள் முதலாளியாகவும் தலைவர்களாகும் இருப்பார்கள். 13. கலைகளில் – நாட்டியம், விளையாட்டுகள் இவற்றில் ஆர்வம் அதிகமிருக்கும். 14. மனோ ரீதியாக பித்த மனிதர்கள், சண்டைக்காரர்களாகவும் தீவிர எதிர்ப்பாளர்களும் இருப்பார்கள். உறுதியான அபிப்பிராயங்களை உடையவர்கள். 15. இவர்களின் உடல் பலமும், வீரியமும் சாதாரண ‘லெவலில்’ இருந்தாலும் அதிக மனத்தின்மை உடையவர்கள் 16. தலைமுடி மென்மையாகவும், குறைந்தும் இருக்கும். செம்பட்டையாக இருக்கும். சீக்கிரம் நரைத்து விடும். 17. குரல் ‘நார்மலாக’ இருக்கும். 18. எளிதாக கற்றுக் கொள்வார்கள் கற்றதை அதிக காலம் நிலையாக மனதில் வைத்திருப்பார்கள். 19. பித்தமுடையவர்களுக்கு ஈறு (பல்) பாதிப்புகள் அதிகம் உண்டாகும் ஈறுகளில் ரத்தம் கசிவது சகஜம். 20. பாலுணர்வு சராசரியாக இருக்கும். சுகில தாது பலம் குறைவு. சருததிகள் குறைவாக அமையும். 21. எண்ணை செறிந்த, சூடான பதார்த்தங்கள் பிடிக்காது 22. தைரிய சாலிகள் படிப்பில் ஆர்வம் இருக்கும். அறிஞர்களாக காணப்படுவார்கள் 23. மும்மலங்கள் ( மலம், சிறுநீர், வியர்வை) அதிக அளவில் வெளிப்படும் தன்மையுடையவர்கள். ஏ.சி. போட்ட அறைகளில் கூட வியர்ப்பார்கள். 24. வாய்ப்புண்கள் அதிகம் வரும். 25. நல்ல காற்றோட்டமான குளிர்ந்த இடம், பித்த பிரகிருதிகளுக்கு பிடிக்கும். 26. பொறுமை குறைவு.

பிரக்ருதிகளுக்கு ஏற்ற உணவு • குளிர்ச்சியான ஆகாரங்கள்:- அரிசி, கோதுமை, பார்லி • சைவ உணவுகள் • மூன்று சுவை ( இனிப்பு, துவர்ப்பு, கசப்பு) உள்ள ஆகாரங்கள் • முட்டைக்கோஸ், காரட், பீன்ஸ், காளான், தேங்காய், வெள்ளரி, உருளைக்கிழங்கு, கீரைகள், காலிஃபிளவர், பீட்ரூட், பட்டாணி, சோயா. • ஆப்பிள், தர்பூசணி, மாதுளை, நெல்லிக்காய், பேரிச்சை, திராட்சை, செர்ரி. • பசும்பால், ஆட்டுப்பால், பால் சார்ந்த உணவுகள், பாதாம், தேங்காய் எண்ணெய் (அளவுடன்) • கொத்தமல்லி, கறிவேப்பிலை, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள் போன்றவற்றை அதிகமாகச் சேர்க்கவும். தவிர்க்க வேண்டியவை: புளிப்பு, உப்பு, காரச்சுவையுள்ள உணவுகள். பூண்டு, வெங்காயம், தேன், நல்லெண்ணெய், எலுமிச்சை, மாம்பழம் மிதமாகப் பயன்படுத்தலாம். வெயிலில் அலைதல், அதிகமாகக் கோபப்படுதல், மதுபானம் போன்றவை கூடாது. பித்த மனிதர்களுக்கு வரும் நோய்கள்:- இரத்தக் கொதிப்பு, சரும நோய்கள், கல்லீரல் நோய்கள் மஞ்சள் காமாலை, மூலம், வாய்ப்புண். நோயை தவிர்க்க:- குளிர்ச்சியான இடங்களில் வசித்தல் தியானம், உடல்பயிற்சி, நீச்சல் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மென்று சுவைப்பீர்
“நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்பது முதுமொழி. அதை முதுமொழியளவிலேயே தான் வைத்திருக்கிறோமே தவிர நடைமுறையில் அதைக் கடைப்பிடிப்பதில்லை. ஒவ்வொரு கிண்ணம் உணவையும் 32 முறை மென்று அதன் பின்னரே விழுங்க வேண்டும் என்று சின்ன வயதில் நம் காதுகளில் உருவேற்றப்பட்டிருந்தாலும் இன்று அதை நினைவுக்குக் கொண்டு வருபவர்கள் எத்தனை பேர்.

நம் உடலிலுள்ள உறுப்புக்களில் உணவின் சுவையை அறியக் கூடிய ஒரே ஒரு உறுப்பு நாக்கு மட்டும் தான். நாக்கை விட்டுப் பிரிந்து தொண்டைக் குழியில் இறங்கி உணவு என்னவாகிறது என்பது நம்மில் பெரும்பாலோர்க்குத் தெரியாது. எனவே, உணவு எவ்வளவுக்கெவ்வளவு அதிக நேரம் நமது நாக்குடன் உறவு கொண்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு உணவின் ருசியை நாம் உணர்ந்து அனுபவிக்க முடியும்.

உணவின் சுவையை அறிவதற்கு மட்டுமன்றி நன்கு மென்று சுவைத்து உண்ணப்படுகின்ற உணவு எளிதில் செரிமானம் அடைகிறது. இதற்கென்றே குறிப்பிட்ட வகையில் நம்முடைய பற்கள் அமைந்துள்ளன. இருப்பினும் நம்மில் எத்தனை பேர் இயற்கை தந்திருக்கும் இந்த அருட்கொடையை எண்ணி வியந்திருக்கிறோம்?

பல மனிதர்கள் ஆடிக் கொண்டும், ஓடிக் கொண்டும் அவசரம் அவசரமாகவும் உண்கின்றனர். இதனால் உணவை மென்று சுவைத்து உண்ண அவகாசம் இன்றிப் போகிறது. மென்று உண்ணவும் உண்ட பின் சிறிது ஓய்வு கொள்ளவும். நேரமில்லாத போது உண்பதைத் தள்ளிப் போட வேண்டும். அது மட்டுமன்றி அவசரமாக உண்கின்ற வேளையில் நிகழ்கின்ற மனநிலை மாறுபாடுகளால் வாயிலும், வயிற்றிலும் சுரக்க வேண்டிய பல செரிமான நீர்கள் சுரக்காமலே போய் விடுவதுண்டு. அதுவுமில்லாமல் வாயில் தொடங்கி மலக்குடல் சீராக நடைபெறுகின்ற செரிமான நிகழ்ச்சிகளில் உணவை வாயிலிட்டு மென்று சுவைப்பது ஒன்று தான்.

நம் கட்டுப்பாட்டில் உள்ள செயல், தொண்டைக்குக் கீழ் நிகழ்கின்ற பிற செயல்கள் எதிலும் நமக்குக் கட்டுப்பாடில்லை அவை தமக்குத் தாமே நிகழ்பவை. எனவே நமக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பை நன்கு பயன்படுத்தி உணவுப் பொருட்களை நன்கு மென்று, சுவைத்து உண்ண வேண்டாமா?

உணவு செரிமானமாவது வாயிலேயே தொடங்கிவிடுகிறது. நம் வாயிலுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரக்கின்றன. உணவு உமிழ் நீருடன் கலக்கும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கிறது. அத்துடன் மாவுப்பொருட்கள் உமிழ் நீருடன் கலந்து வாயிலேயே உடைபடத் தொடங்குகின்றன. இந்த உமிழ் நீரில் உள்ள டயலின் என்னும் நொதி மாவுப் பொருளைச் சர்க்கரையாக மாற்றத் தொடங்கிவிடுகிறது. இது சிறுகுடலுக்குச் செல்கின்ற போது எளிதாகச் செரிக்கப்படுகிறது.

நன்கு சுவைக்காமல், மெல்லாமல் உணவு விழுங்கப்படுகின்ற போது பசியின்மை, செரிமானக் குறைவு, வயிற்றோட்டம், மலச்சிக்கல் என்று பலவகைத் தொல்லைகள் தோன்றத் தொடங்குகின்றன. உணவு பற்களால் நன்கு அரைக்கப்பட்டு, மெல்லப்படுகின்ற போது அவை மிக நுண்ணிய துகள்களாக மாறுகின்றன. அப்போது உமிழ் நீர் மிக எளிதாக அவற்றுடன் இணைய முடிகிறது. உணவுப் பொருள்கள் வாயில் நன்கு அரைபடாமல் விழுங்கப்படுமாயின் உள்ளே உள்ள உறுப்புக்கள் தமது சக்திக்கு மீறி உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குக் ஆட்படுகின்றன. இது குறித்தே “பற்கள் உங்கள் வாயில் தான் இருக்கிறதே தவிர வயிற்றுக்குள் இல்லை” என்று கூறுவார் ஒரு உணவியல் அறிஞர்.

நன்கு சுவைத்து மென்று உண்ணச் சிறிது அதிகமான நேரம் தேவைப்படுவதால் மிகுந்த உணவு உண்பது தவிர்க்கப்படுகிறது. பசி எளிதில் அடங்குகிறது. அது மட்டுமன்றி சமைக்கப்படாத பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் உண்ண இயலுகிறது. பொரித்த, வறுத்த, பதனிடப்பட்ட பல உணவுகள் உடல் நலத்துக்கு ஏற்றவையல்ல என்று தெரிந்திருந்தும் உண்கிறோம். இவற்றை மென்று உண்ணத் தேவையில்லாத காரணத்தால் விழுங்கிறோம். அதுவும் அதிக அளவில் எண்ணெயும், காரமும், மசாலாவும் சேர்ந்த இவ்வகை உணவு வயிற்றினுள் சென்று அங்குள்ள சீத சவ்வைச் சேதமுறச் செய்கின்றன. இதன் விளைவாக அஜுர்ணம், ஏப்பம், உப்புசம், மலச்சிக்கல் போன்ற பல நோய்கள் உண்டாகின்றன.

எனவே முயன்ற வரை இயற்கை உணவுகளை உண்பதுடன் எஞ்சிய பிற உணவு வகைகளை நன்கு மென்று சுவைத்து உண்பது உடலுக்கு நன்மை பயக்கும்.